யாழ் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் விபரங்களை யாழ்.குடா சிறிலங்காப் படைத் தலைமையகம் கோரியுள்ளது. மாணவர்களின் சொந்த
முகவரி, கல்வி கற்ற பாடசாலை, தற்போது பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் துறை போன்ற விபரங்களையே படைத்தரப்பு கோரியுள்ளது.
படைத்தரப்பின் இக்கோரிக்கைக்கு ஏற்ப நாங்கள் விபரங்களை வழங்க முடியாது எனவும் அவ்வாறு விபரங்கள் தேவை எனில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாகவே அதனைப் பெறமுடியும் எனவும் இல்லையேல் கல்விஅமைச்சின் அறிவுறுத்தல் கிடைத்தால் மட்டுமே விபரங்களை வழங்கமுடியும் எனவும் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் ஆட்சேபத்தை அடுத்தே பல்கலைக்கழகம் இம் முடிவை எடுத்தது.