விசேட அதிரடிப்படையினரை கிழக் கில் இருந்து அகற்றுமாறு அரசிடம் தான் கோரினார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்திருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிள்ளையான்.
போலியான குற்றச்சாட்டை முன்வைத்து கீழ்த்தரமான பிரசாரத்தில் ரணில் ஈடுபட்டிருக்கிறார் என்று பதிலுக்கு குற்றம் சுமத்தியிருக்கிறார்.கிழக்கில் இருந்து அதிரடிப்படையினர் வெளியேறியமைக்கு பிள்ளையான் தான் காரணம் என்று ரணில் தெரிவித்த கருத்துக்கு மறுப்புத் தெரிவித்துத் தமது அமைப்பு சார்பு இணையத்தளத்திற்கு இக் கருத்தினை அவர் தெரிவித்திருக்கின்றார்.அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:சிறுபிள்ளைத் தனமான இத்தகைய குற்றச்சாட்டுக்களை நான் இதற்கு முன்னர் கேள்விப்பட்டதேயில்லை. சுமார் 31 வருடம் இந்நாட்டின் ஆட்யை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, அரசியல் இலாபத்னைதக் கருத்திற்கொண்டு இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கீழ்த்தரமான உத்திகளைக் கைக்கொள்வது கவலைக்குரிய விடயம்.
இலங்கை இராணுவத்தினது மேன்மை, வீரம் குறித்து எந்த வசனத்தையும் பேசாமல் பொய்யான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் இவர்கள் முன்வைக்கின்றனர்.
அத்துடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் புதிய அரசியல் கட்சியாகும். கிழக்கு உள்ளூராட்சித் தேர்தல் அண்மிக்கும் போதே எமது கட்சி பதிவு செய்யப்பட்டது. ஜனநாயக விழுமியங்களினால் கட்சியினைக் கட்டியெழுப்புவதே எமது இலட்சியம். அதன் பொருட்டே உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டோம்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் இதற்காகக் போட்டியிடவுள்ளோம். ஐ.தே.க கட்சியினைப் போலல்லாது எமது எல்லை என்ன என்பதை நாமறிவோம். ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம், அதன் மகிமை பற்றி எமக்கு சிறந்த புரிந்துணர்வு உள்ளது. அது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதில் யாரும் தலையிடக் கூடாது. என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.