News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

புலிகள் இல்லாமல் தீர்வு சாத்தியம் அல்ல

26-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

இலங்கையின் இன நெருக்கடிக்கு விடுதலைப் புலிகளின் சம்பந்தமில்லாமல் தீர்வு சாத்தியமில்லை என்று தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதையிட்டு கவலை தெரிவித்திருப்பதுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்திருப்பதுடன், மோதலில் சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்பினராகிய இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஈடுபாடு காட்டாமல் தீர்வுகாண முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
 
புலம்பெயர்ந்த தமிழ் மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட தன்னார்வ தொண்டர் நிறுவனமான உலகளாவிய சமாதான ஆதரவுக் குழுவின், ஏற்பாட்டில் லண்டனில் கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்ற இருநாள் கருத்தரங்கில் தென்னாபிரிக்கா சார்பில் கலந்துகொண்ட அந்நாட்டின் தொலைத்தொடர்புத்துறை பிரதியமைச்சர் ரோய் படையாச்சி, இலங்கையில் சமாதானம் காணும் முயற்சிகளுக்கும் தென்னாபிரிக்கா சகல உதவிகளையும் வழங்கும் என்று உறுதியளித்திருக்கிறார்.
 
ரோய் படையாச்சி இலங்கை விவகாரம் தொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது;
 
இலங்கையில் மோதல் அதிகரித்திருப்பதையிட்டு தென்னாபிரிக்கா கவலையடைந்துள்ளது. குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் தொடர்பாக நாங்கள் கவலையடைந்திருக்கிறோம்.
 
மோதலில் சம்பந்தப்பட்ட இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை தொடர்பாக நெருங்கிவரவேண்டும் என்ற அக்கறையை தென்னாபிரிக்கா கொண்டுள்ளது.
 
பேச்சுவார்த்தை மேசைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் திரும்பிவருவதற்கான சகல முயற்சியும் ஊக்கமும் அளிக்கப்படுவது அவசியமென நாம் நம்புகின்றோம்.
 
இதுவே தென்னாபிரிக்க சமூகத்தின் உறுதியான அபிப்பிராயமாகும். இதற்கு அரசாங்கமும் ஆதரவளித்துள்ளது.
 
மோதலில் சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்பினராகிய விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் சம்பந்தப்படாமல் தீர்வு காணமுடியாதென்பதை தென்னாபிரிக்க சமூகம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.
 
விடுதலைப் புலிகள் அமைப்பு தமது அதிகார பூர்வமான பிரதிநிதிகளென தமிழ் மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை மோதலுக்கு சமாதானத்தீர்வு காண்பதற்கான தமது சொந்த முயற்சியை சர்வதேச சமூகம் அதிகரிக்கவேண்டியது அவசியமென்று நாம் நம்புகின்றோம்.
 
ஆயினும் இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதை சர்வதேசசமூகம் கூறவேண்டியதில்லை.
 
இந்த விடயம் இலங்கை மக்களாலேயே தீர்மானிக்கப்பட வேண்டியது என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம். இது தென்னாபிரிக்க மக்களினதும், அரசாங்கத்தினதும் அபிப்பிராயமாகும் என்று படையாச்சி தெரிவித்தார்.
 
விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென பட்டியலிட்டிருப்பது தொடர்பாக அவருடைய கருத்தைக் கேட்டபோது; `நிறவெறிக்கெதிரான விடுதலைப் போரை நாங்கள் மேற்கொண்டபோது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பயங்கரவாத அமைப்பாக வர்ணிக்கப்பட்டது.
 
நாங்கள் ஒருபோதும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிராக நாங்கள் போராடினோம்' என்று அவர் கூறியுள்ளார்.
 
நாங்கள் ஒரு முக்கியமானதும், தந்திரோபாயமானதுமான விடயங்களை மேற்கொண்டோம். அதாவது சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளுக்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டோம். அதனால் மக்கள் பகிரங்கமாக இலகுவான முறையில் பங்களிப்பை நல்க முடிந்தது.
 
அடக்குமுறைச் சட்டத்திற்கு அஞ்சாமல் மக்கள் பங்குகொள்ள முடிந்ததுடன், சுதந்திரமானதும், ஜனநாயக ரீதியானதுமான தென்னாபிரிக்காவை உருவாக்க இது தேவைப்பட்டது.
 
பேச்சுவார்த்தை மூலமான இணக்கப்பாட்டை உருவாக்கவேண்டிய சூழ்நிலைகளில் எமது அமைப்புகள் தடைசெய்யப்படக் கூடாதென நாம் கடுமையாக வாதிட்டோம்.
 
அச்சமயம் எமது அமைப்புகள் தடை செய்யப்பட்டிருந்தன. அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் நாம் வலியுறுத்தினோம்.
 
இவை எமது போராட்டத்திலிருந்த தடைக்கற்களாகும். இந்ததடைகளை அகற்ற எமது சமூகத்தையும் சர்வதேசசமூகத்தையும் அணிதிரட்டினோம்.
 
இவையே எமது அனுபவத்திலிருந்து உருவான பாடங்களாகும். இவை உங்கள் பேராட்டத்துக்கு பொருத்தமானவையென நான் கருதுகின்றேன்' என்றும் ரோய் படையாச்சி தமிழ் செய்தியாளர்களுக்கு கூறியுள்ளார்.
 
இதேவேளை, கருத்தரங்கில் உரைநிகழ்த்துகையில் இலங்கை அரசு, புலிகளும் மீண்டும் பேச்சை ஆரம்பிக்கவேண்டுமென்ற தென்னாபிரிக்க அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்திய படையாச்சி, மூன்றாம் தரப்பின் உதவி அவசியமெனவும் அழுத்தி உரைத்திருக்கிறார்.
 
பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கு அனுசரணை தேவைப்படும். அனுசரணை வழங்கும் தரப்பினர் மோதலில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் மதிக்கப்படுபவராக இருத்தல் வேண்டும். இருதரப்பினரும் அழைக்காவிடில் தென்னாபிரிக்கா தன்னை சம்பந்தப்படுத்திக்கொள்வதில்லை.
 
சிம்பாப்பே, கோட்டிவோர், புரூண்டி ஆகிய இடங்களுக்கு மோதலில் சம்பந்தப்பட்டவர்களின் அழைப்பின் பேரிலேயே சென்றோம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
 
பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குரிய நம்பகரமானதும், சட்டபூர்வமானதுமான பிரதிநிதிகள் யார் என்பது தொடர்பான கேள்வியொன்றுக்கு அவர் பதிலளிக்கையில்; மனித உரிமைகளுக்கான தமிழர் நிலையத்தில் அங்கம் வகிக்கும் சகாக்களிடமிருந்து சுவாரஸ்யமான ஒரு கையேடு எனக்குக் கிடைத்தது.
 
இதனை ஒவ்வொருவருக்கும் சிபார்சு செய்கிறேன். `சுயநிர்ணயத்துக்கான தமிழ் மக்களின் உரிமைகள்' என்பது பற்றியதே இந்தப் பிரசுரமாகும்.
 
 இந்தப் பிரச்சினை தொடர்பாக தென்னாபிரிக்க மக்கள் எதனை விளக்கிக்கொண்டுள்ளனர் என்பதைப் பற்றி உங்களுக்கு நிச்சயப்படுத்திக்கொள்ள முடியாது. அதாவது யார் அதிகாரபூர்வமான தலைவரென்ற (தமிழர்களின்) கேள்வியே அதுவாகும்.
 
அதில் சிலவற்றை நான் வாசிக்க விரும்புகின்றேன். இலங்கை நெருக்கடி தொடர்பாக தென்னாபிரிக்கர்கள் சிந்திக்கும் வழிமுறை. இதில் அதிகம் உள்ளதென நான் கருதுகின்றேன்.
 
2002 யுத்தநிறுத்த உடன்படிக்கையானது மோதலில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரில் புலிகள் மற்றைய தரப்பு என்பதை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்ததோர் ஒப்பந்தமாகும்.
 
விடுதலைப் புலிகள் தமிழர் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பதற்கு அந்த அமைப்பின் மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியமை மற்றதோர் அங்கீகாரமாகும்.
 
அத்துடன், சர்வதேச தலைநகரங்களில் கொழும்பு புலிகளுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தது.
 
அத்துடன் 2004 தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புலிகளின் தலைமைத்துவத்தை தமிழ் மக்களின் தேசியத் தலைமைத்துவம் என்று ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் ரோய் படையாச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அத்துடன் அந்த பிரசுரத்தை மேற்கோள்காட்டி உரையாற்றிய படையாச்சி, பயங்கரவாதத்திற்கெதிரான போரென தற்போதைய அரசியல் சூழல் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
 
விடுதலைப் புலிகள் தொடர்பாக தனது கணிப்பீட்டை மீளாய்வு செய்வதற்கு இது சர்வதேச சமூகத்திற்கு சிலசமயம் பொருத்தமான தருணமாக இருக்கக்கூடும்.
 
சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் அதேசமயம் அதன் சுயபாதுகாப்பு உரிமைக்கான செயற்பாட்டை மேற்கொள்கின்றதாகத் தென்படுவது தெளிவானதாகும்.
 
இந்த மோதல் தொடர்பாக சர்வதேச சமூக சமநிலையான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது.
 
இலங்கை அரசுடன் புலிகள் பேசுவதற்கு இராஜதந்திர ரீதியான ஆதரவை சர்வதேச சமூகம் வழங்க வேண்டிய தேவையுள்ளது. உலகின் இந்தப் பாகத்தில் அமைதி ஏற்படவேண்டுமென சர்வதேச சமூகம் விரும்பினால் இந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்கவேண்டியது அவசியமாகும்.
 
அரசாங்கம், சிவில் சமூகம், தன்னார்வ தொண்டர் நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த நீங்கள் இலங்கை அரசும், புலிகளும் பேச்சுவார்த்தைக்கு திரும்பவேண்டும் என்பதற்குரிய வழிகாட்டலையும், ஆதரவையும் வழங்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமானதாகும்.
 
அதேசமயம் இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுவதற்காக சர்வதேச சமூகத்தினராகிய எங்களின் முயற்சிகளுக்கு ஆதரவையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதும் அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 00:49:00 சிறீலங்கா படைகளால் வரணி கண்டல் காட்டுப்பகுதியில்,பெருமெடுப்பில் போர் ஒத்திகை
•  08 Jul 2008 00:46:00 காலநிலை ஒத்துழைத்தால் ஒரு வாரத்தில் தேவையான அரிசி இலங்கையை வந்தடையும
•  08 Jul 2008 00:43:00 இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்க,படும
•  08 Jul 2008 00:38:00 வடக்கு அபிவிருத்திக்கு விஷேட நிர்வாக குழ
•  08 Jul 2008 00:16:00 அகலக்கால் பதித்துள்ள இராணுவத்திற்கு தக்கபாடம் புகட்டுவோம்
•  07 Jul 2008 16:56:00 சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் துணைப் படைக்குழுவினரும் பங்கேற்பர்: றஜீவ விஜயசிங்க
•  07 Jul 2008 16:48:00 அரசாங்கமும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதை அரசாங்க சமாதானச் செயலகப் பிரதானி ஏற்றுக்கொண்டுள்ளா
•  07 Jul 2008 16:25:00 இலங்கையின் படைத்தரப்புகள் நாடாளுமன்றக்கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்
•  07 Jul 2008 16:07:00 ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக 50 பேர் மாத்திரமே வன்னிக்குச் செல்ல அனுமதி
•  07 Jul 2008 15:38:00 மிகின் லங்கா நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
•  07 Jul 2008 15:28:00 தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய எச்சரிக்கை
•  07 Jul 2008 15:22:00 தமிழர் வளத்தை சுரண்டும் நடவடிக்கைகளில் சிங்கள அரசு
•  07 Jul 2008 15:10:00 தமிழர்களுக்கு தமிழ் கூட்டமைப்பின் அழைப்பு
•  07 Jul 2008 15:03:00 திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை
•  07 Jul 2008 14:40:00 வவுனியா மாறம்பைக்குளத்தில் சுட்டெரிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு
•  07 Jul 2008 12:53:00 ஓமந்தை சோதனைச்சாவடி இன்று திறக்கப்படவுள்ளது
•  07 Jul 2008 12:50:00 விரைவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்று உடன்படிக்கை
•  07 Jul 2008 12:47:00 ஓமந்தைப் பாதைப் பகுதிக்கு செஞ்சிலுவைச்சங்கம் மீண்டும் வரவேண்டும்
•  07 Jul 2008 12:46:00 வாழ்க்கைப் படி ோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும
•  07 Jul 2008 12:43:00 மக்கள் சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்கவேண்டும்
•  07 Jul 2008 12:41:00 எண்ணெய் அகழ்வூக்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்த
•  07 Jul 2008 12:33:00 இடம்பெயர்ந்தோரை நோக்கி படையினரின் இலுப்பைக்கடவையில் எறிகனை வீச்சு
•  07 Jul 2008 12:30:00 ஊடகவியலாளர்களிடம் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன கோரிக்கை
•  07 Jul 2008 12:25:00 ஈழ வரலாற்றை தமிழ் சிறுவர்களுக்குகற்பிக்கக் கூடாத
•  07 Jul 2008 12:23:00 மீண்டும் விவசாய நடவடிக்கைகளுக்கு செம்மணிப் பகுதியில் அனுமத
•  07 Jul 2008 12:21:00 எரிவாயு கொள்கலன் கம்பஹாவில் வெடித்து இருவர் பல
•  07 Jul 2008 12:20:00 ஜனாதிபதி புலம்பெயர்ந்த இலங்கையர்களை சந்தித்தனர
•  07 Jul 2008 12:15:00 சர்வதேசம சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முன்வரவேண்டும
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions