குடாநாட்டின் மரக்கறிச் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் நாளாந்தம் உயர் வடைந்து காணப்படுகின்றன.
அண்மைக்காலமாகப் பெய்த மழையை அடுத்து விவசாய நிலங்களில் செய்கை பண்ணப்பட்ட பயிர்கள் நாசமடைந்ததுடன் வளர்ந்த பயிர்களின் பூக்கள், காய்கள் என்பன வாடி வீழ்ந்தன. இதனால் மரக்கறிச் செய்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்துச் சந்தைக்கு வரும் மரக்கறிகளின் அளவு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது என்றார்.
மரக்கறிச் செய்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே அவற்றின் விலை உயர்வுக்குக் காரணம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகளுக்குப் பல லட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கத்தரிக்காய் 120 ரூபாவா கவும், தக்காளி 100 ரூபாவாகவும், முருங் கைக்காய் 400 ரூபா வாகவும், உள்ளூர் உருளைக்கிழங்கு 120 ரூபா வாகவும், வெங்காயம் 80 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதேவேளை ஒரு சில மரக்கறிகளின் விலைகள் குறைவாக உள்ளதையும் காணக் கூடியதாக உள்ளது.