மன்னார் பிரதேசத்தில் உள்ள புலிகளின் முக்கிய தளங்கள் மீது விமானப் படையினர் இன்று காலை இரண்டு பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று காலை 10.15 மணிக்கு எம்.ஐ. 24 ரக ஹெலிகொப்டர்கள் மன்னாரில் அலன்குளம் மற்றும் களியடஞ்சன் ஆகிய பிரதேசங்களில் இனங்கானப்பட்ட புலிகளின் முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படைப் பேச்சாளர் கமான்டர் என்று விஜேசூரிய தெரிவித்தார். தரையில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் படையினருக்கு சாதகமாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரவித்தார்.
கிளிநொச்சியில் உள்ள விஸ்வமடுக்குளம் பிரதேசத்தில் படகுகள் தயாரிக்கும் நிலையம் ஒன்றின் மீது இரண்டாவது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை 10.50 மணியளவில் ஜெட் விமானங்கள் இத்தாக்குதல்களை மேற்கொண்டன.
புலனாய்வுத் தகவல்கள் ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னரே இத்தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் குறிப்பிட்ட இலக்குகள் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டதை விமானி உறுதிப்படுத்தியதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.