நித்திரவிளை இந்திய கடல் எல்லையில் கடந்த 7ம் திகதி மீன் பிடித்துக்கொண்டிருந்த குமரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்று இலங்கையில் சிறை வைத்தனர்.
மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டின் பேரில் 9ம் திகதி 50 மீனவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். இதனால், தமிழக அரசும், மீனவ அமைப்புகளும் தொடர்ந்து இலங்கை கடற்படையுடன் பேச்சுவார்த்தை நடத்தின. இதையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் நேற்று இலங்கை கடற்படையினர் விடுவித்தனர்