26-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
ஸ்ரீலங்காவின் இனப்பிரச்சினைக்கான நீடித்த அரசியல் ரீதியான தீர்வு காணப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா மக்கள் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ முடியும் எனக் கனடா தெரிவித்துள்ளது. சிறுபான்மை பெரும்பான்மை சமூகங்கள் ஒருங்கிணைந்து வாழக்கூடிய நிலைமையைப் பன்மைத்துவப்படுத்தப்பட்ட அரசியல் தீர்வு ஏற்படுத்தும் எனக் கனடாவின் ஸ்ரீலங்காவுக்கான உயர்ஸ்தானிகர் எஞ்சலா பொக்டன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்காவின் பல்வகைமைத்துவம் மற்றும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வை ஏற்படுத்துவதில் ஏற்பட்ட தோல்விகள் காரணமாகவே இத்தகைய மோதல்கள் தோன்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்காவுடன் நீண்டகாலமாக இராஜதந்திர உறவுகளைப் பேணிவரும் நாடு என்ற ரீதியில ஸ்ரீலங்காவில் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் எனக் கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
|