26-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. தேர்தலில் இரண்டு கட்சிகளும் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்த இறுதி முடிவை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வெளியிடுவதாக இரண்டு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். கிழக்கு மாகாணத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியாகவும் ஏனைய மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தும் போட்டியிடுவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனநாயக்க மற்றும் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் அதன் தலைவர் ரஃப் ஹக்கீம் மற்றும் செயலாளர் ஹசன் அலி உள்ளிட்ட மேலும் சிலர் கலந்து கொண்டனர்.
|