மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை நாசமடைந்துள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் டாக்டர் ஆர். ருஷாங்கன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 ஆயிரத்து 556 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்கு அறுவடைக்குத் தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த நெற்கதிர்களே வெள்ளத்தால் அழிக்கப்பட்டுள்ளன.
11 விவசாய போதனாசிரியர் பிரிவுகளில் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பிரிவில் 3497 ஏக்கரும், வெல்லாவெளி பிரிவில் 2000 ஏக்கரும், வாகரையில் 1500 ஏக்கரும், வாழைச்சேனையில் 2125 ஏக்கரும், கல்லடியில் 800 ஏக்கரும், மண்டூரில் 730 ஏக்கரும் பழுகாமத்தில் 700 ஏக்கரும், தாந்தாமலையில் 100 ஏக்கரும், கிரானில் 150 ஏக்கரும் நீரில் மூழ்கி அழிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.