கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கென தனியான அலகினை ஏற்புடுத்த முனையும் மேற்குலக நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் அரசாங்கம் சரியான பாடம் புகட்ட வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
இலங்கையின் உள் விவகாரத்தில் தலையீடு செய்ய முற்படும் மேற்குலக நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற தெளிவான செய்தியை தெரிவிக்கும் என்று ஜே.வி.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது