வியாழக்கிழமை விடுதலைப்புலிகளின் கட்டளை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி மணலாற்றுப்பகுதியில் கடந்த இருநாட்களில் இருஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை மதியம் 1.15 மணியளவில் சிலோன் தியேட்டர் பகுதியில் இருமணிநேரம் முறியடிப்பு தாக்குதல் நிகழ்ந்ததாகவும் இதில் 5 படையினர் கொல்லப்பட்டதாகவும் ஒருபடையினரது உடலம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இதேபோன்று கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும தெரியவருகிறது.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் ஒரு ரி-56 ரக துப்பாக்கி, 18 மகசீன், 4000 ரவைகள், நான்கு துப்பாக்கி கோல்சர், 5 தலைக்கவசம், இரு கத்திகள், 2 இராணுவ பை, 6 தண்ணீர் கொள்கலன் ஆகியன கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.