இன்று காலை வன்னியில் விடுதலைப்புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது இலங்கை விமானப் படையினரின் விமானங்கள் விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாபிற்க்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று காலை 6.25 மணியளவில் வன்னி கல்மண்டு மற்றும் இரணைமடுவில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் இனங்காணப்பட்ட இரு இலக்குகள் மீது கிபிர் மற்றும் E7 ரக விமானங்கள் விமானத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் அதேவேளை மற்றுமொரு தாக்குதல் இன்று காலை 6.35 மணியளவில் பூநரி வாலைப்பத்து பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகவும், இத்தாக்குதல் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக விமானி உறுதிப்படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது
எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல் எதுவும் வெளியாகவில்லை