மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரின் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை இரவு 10.15 மணியளவில் ஏறாவூர் பள்ளியடிவீதியில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பஸீர் சேகுதாவித்தின் மருமகனின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ நேரம் வீட்டில் இருக்காத காரணத்தினால் உயிர் சேதங்கள் இடம்பெறவில்லையென ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் வீட்டுக்கு சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஏறாவூர் பொலிஸார்,இது தொடர்பான தீவிரவிசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை கிழக்குமாகாணசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் மீதான தாக்குதலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் எச்.வி.ஹேரத்திடம் முறையிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரான ஏச்.எச்.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.