உலக நாடுகளில் 2007ஆம் ஆண்டில் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது வருடாந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் பிரிட்டன்.
அதில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்தும் மிக மோசமாக உள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது. எனினும், உலகில் மனித உரிமைகள் நிலைவரம் கவலைக்குரிய கட்டத்தை அடைந்திருப்பதாகத் தெரிவித்து பிரிட்டன் பட்டியலிட்ட இருபத்தியொரு நாடுகளில் இலங்கையின் பெயர் இல்லை.
பிரிட்டிஷ் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சு விடுத்துள்ள மிக நீண்ட அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பாகக் கூறப்பட்டுள்ள சில அம்சங்கள் வருமாறு:இலங்கையின் மனித உரிமை நிலைவரம் மிக மோசமாகவுள்ளது. தொடரும் மோதல்களின் அறிகுறியாகவும் காரணியாகவும் மனித உரிமை மீறல்கள் விளங்குகின்றன. அரச படைகள், விடுதலைப் புலிகள் மற்றும் கருணா குழுவினால் மனித உரிமைத் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதப் படுகொலைகள், காணாமற் போகச்செய்தல் மற்றும் சிறுவர்களைப் படையணிகளில் சேர்த்தல் என்பன தொடர்கின்றன.இலங்கையின் மோதலிற்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கான எமது அணுகுமுறையின் முக்கிய பகுதியாக மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வுகாண்பது அமைகின்றது.சமாதானத்தை ஏற்படுத்த
மனித உரிமை பேணப்படவேண்டும்இதன் காரணமாக இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையாக விசாரணை செய்வதும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதும் மிக முக்கியமானவையாகும்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கண்காணிப்புக்குழுவை ஏற்படுத்துமாறு 2006 டிசம்பரில் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த வேண்டுகோளை பிரிட்டன் ஆதரித்துள்ளது.சர்வதேச பிரமுகர்களைக் கொண்ட சுயாதீனக்குழுவில் இடம்பெறுவதற்கு பேராசிரியர் சேர் நைகெல் ரொட்லியை பிரிட்டன் நியமித்தது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதே சர்வதேச பிரமுகர்கள் குழுவின் நோக்கம்.பிரேரணையை நிறைவேற்றுவதுசாத்தியம் இல்லை இலங்கையில் 2006 2009 இற்குள் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பிரிட்டனின் தந்திரோபாயத்தின் முக்கிய நோக்கமாக சமூகங்களின் பாதுகாப்பை அதிகரிப்பதும், மனித உரிமைகளைப் பேணுவதும் அமைகின்றன.
சட்டமுறைமை மூலமாக அநீதியை எதிர்க்கக்கூடிய திறனுள்ளவையாக உள்ளூர் சமூகங்களை மாற்றுவதை நாங்கள் ஊக்குவிக்கின்றோம். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, உள்ளூர் மட்ட உரையாடல்கள் போன்றவற்றையும் நாம் ஊக்குவிக்கின்றோம்.ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறவர்களைப் பாதுகாக்கும் பணியில் யுனிசெவ் அமைப்புடன் இணைந்து செயற்படுகின்றோம்.இலங்கையில் மீண்டும் மோதல் மூண்டதைத் தொடர்ந்து வன்முறைகள் அதிகரிப்பது குறித்த தனது கவலையைப் பிரதிபலிக்கும் விததிதல் பிரேரணையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்தது.இது தொடர்பாக ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதுக்குழுவுடனும், இலங்கை அரசுடனும் ஐரோப்பிய ஒன்றியம் தீவிர பேச்சுகளை மேற்கொண்டது. இந்தப் பிரேரணையை இலங்கையை ஏற்றுக்கொள்ளச்செய்வதே இதன் நோக்கம்.எனினும், இது சாத்தியமாகவில்லை. இதன் காரணமாக இந்தப் பிரேரணையை பரிசீலிப்பதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கவுன்ஸில் கைவிட்டது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது