பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களைவதானதுää அவர்கள் மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குல்களுக்கு வழிவகுக்கும் என ஜே வி பிய்pன் பிரசார செயலர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜே வி பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பிள்ளையான் குழுவின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என கோரியிருந்தநிலையிலேயே விமல் வீரவன்ச இந்த முரண்பட்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.
தேசப்பற்றாளர் இயக்கத்தின் ஊடக மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்ற போது கருத்துரைத்த அவர் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிள்ளையான் குழுவை வரதராஜப்பெருமாளுக்கு ஒப்பிட்டமை ஏற்றுக்கொள்ளமுடியாதது எனக்குறிப்பிட்டார். ஏனெனில் பிள்ளையான் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்த நாள் முதல் அரசாங்த்துடனும் இராணுவத்தினருடனும் சேர்ந்தியங்குவவதாக தெரிவித்தார்.