இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள சம்ப10ர் அனல் மின் மையப் பணிகள் அடுத்த மூன்று மாத காலப்பகுதிக்குள் ஆரம்பமாகும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மின்சார மையத்தின் மூலம் சுமார் ஆயிரம் மெகாவோட்ஸ் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.2012ம் ஆண்டளவில் இந்த உற்பத்தி மையத்தில் இருந்து பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த மின்சார மையத்தின் நிர்மாணப் பணிகளை இலங்கை மின்சார சபையின் கண்காணிப்பின் கீழ் இந்திய நிறுவனமான என்.பி.ரி.சி. மேற்கொள்ளவுள்ளது.இந்த மையத்தின் அமைப்பிற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 700 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படவுள்ளது.முதல் கட்டப் பணிகளுக்காக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன.
இதில் 70 வீதமானவை இந்தியா மற்றும் இலங்கை மின்சார சபையின் நிதிகள் தவிர்ந்த ஏனைய வெளிநாட்டு நிதிகள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.இதேவேளை இந்த மின்சார மையத்தினால் எவ்வித சுற்றாடல் பிரச்சினையும் ஏற்படாது என மின்சக்தி துறை அமைச்சு உறுதியளித்துள்ளது.சம்பூர் அனல் மின் மையத்திற்காக வருடமொன்றுக்கு ஒரு மில்லியன் தொன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படவுள்ளது.இதில் 99.2 வீதமானவை நட்பு ரீதியாக பெற்றுக் கொள்ளப் படவுள்ளதாக தெரிவிக்கும் அரசாங்கம்ää இந்த மின்சார மையத்தின் மூலம் 4 ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.