திருகோணமலையிலிருந்து வரும் வழியில் அமைக்கப்பட்டுள்ள ஹபரன சோதனைச் சாவடியில் கத்தோலிக்க ஆயர்கள் இருவர் காவல்துறையினரால் அசௌகரியங்களுக்கு உட்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கத்தோலிக்க ஆயர் இல்லம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
குறித்த சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் ஆயர்கள் இருவரையும் வாகனத்தில் இருந்து இறங்கச் செய்ததுடன் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதேபோன்ற சம்பவம் மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கு வந்த இந்து மதகுரு ஒருவருக்கும் ஏற்பட்டதாக இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றதாக அறியவில்லை என ஹபரன சோதனைச் சாவடி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.