பிரபாகரன் திரைப்பட இயக்குநர் துஷார பீரிஸ் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.
பிரபாகரன் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளுக்காக சென்னைக்கு சென்றிருந்த இயக்குநர் துஷார பீரிஸ் தமிழீழ உணர்வாளர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.
இத்தாக்குதலில் காயமடைந்திருந்த அவர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
பிரபாகரன் படத்தினை தமிழகத்தில் தமிழில் வெளியிடவும் இவர் நடவடிக்கை எடுத்திருந்தார். அதனை அங்கு வெளியிடுவதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தன்மீதான தாக்குதல் மற்றும் தமிழகத்தில் படத்தினை திரையிட எழுந்துள்ள எதிர்ப்பு என்பவற்றை கண்டித்தே இயக்குநர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.