28-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
யாழ்ப்பாணத்தில் மக்கள் படையினரால் அடிமைகள் போல நடத்தப்படுவதாக யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாண மக்களுக்கான ஏ 9 வீதி மூடப்பட்டமையை அடுத்து அவர்கள் பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர். மீன்பிடித்தடையினால் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்கள். போக்குவரத்துக்கள் ஸ்தம்பித்துள்ளன. இராணுவ வாகன நடமாட்டங்களினால் இந்த நிலை அடிக்கடி ஏற்படுகிறது. ஊரடங்குச் சட்டம் இரவு 9 மணிக்கு அமுலாக்கின்றபடியால் தனியார் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் பிற்பகல் 3 மணிக்கே நிறுத்தப்பட்டு விடுகின்றன. ஊடரங்கு சட்டவேளைகளில் இராணுவமும் துணைப்படைகளும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றன. குடாநாட்டில் விளையாட்டு மற்றும் கலாசார நடவடிக்கைகள் பாரியளவில் குறைந்துள்ளன. கல்விக்கான உரிய இலவச நூல்கள் கிடைக்காமையால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளனர்.
|