மன்னாரில் இன்று வியாழக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளின் எறிகணைத்தாக்குதலில் விசேட அதிரடிப்படையினர் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் கட்டுக்கரைக்குளம் விசேட அதிரடிப்படையினர்pன் முகாம் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் சரமாரியான எறிகணைத்தாக்குதலை மேற்கொண்டதகவும் இதன்போது விசேட அதிரடிப்படையினர் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் படைவட்டாரங்கள் தெரிவித்தன.
மன்னார் பகுதியில் இடம்பெற்ற மோதல் மற்றும் பொறிவெடியில் சிக்கி இரண்டு படையினர் காயமடைந்துள்ளதாகவும் படைவட்டாரங்கள் தெரிவித்தன.