ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆனைக்குழுவிலிருந்து வெளியேற்றப்படும அபாயத்தை எதிர்நோக்கியுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் அதனை தவிர்த்துக்கொள்வதற்கான தீவர முயற்சியில் ஈடபட்டுள்ளது.
மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த விடயம் தொடர்பாக அவசர விஜயமொன்றை மேற்கொண்டு நியூயோர்க் சென்றுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் ஜ.நா. மனித உரிமைகள் ஆனைக்குழுவில் ஆசிய நாடுகளுக்கான அங்கத்துவத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த 2006இல் நடைபெற்ற தேர்தல் மூலம் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் உறுப்புரிமையை இலங்கை பெற்றுக்கொண்டது.
எனினும் தற்போது நாட்டில் மிக மோசமாக அதிகரித்துள்ள மனித உரிமைகள் மீறல் ஆட் கடத்தல் காணாமல் போதல் மற்றும் துணை ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சர்வதேச சமூகத்தின் கடும் கண்டணத்திற்குள்ளாகியுள்ளன.
அத்துடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு அங்கத்துவம் வழங்குவது தொடர்பாக ஆணைக்குழு மீள்பரிசீலணை செய்ய வேண்டுமென ஜரோப்பிய நாடுகள் பலவும் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், ஜ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டால் அது சர்வதேச சமூகத்தின் உதவிகள் குறைவடைய வழிவகுப்பதுடன், நாட்டுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்துமென அரசாங்கம் பாரிய கவலை கொண்டுள்ளது.
இதனைக் கவனத்திற் கொண்டே அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு நிய+யோர்க் சென்று ஜ.நா.வின் 30க்கும் மேற்பட்ட தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அறிய வருகிறது