திருகோணமலை மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு சில பகுதிகளில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த ஒரு தொகுதியினர் இன்று வியாழக்கிழமை தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட்டனர்.
மயிலவெட்டுவான்,திருகோணமலை தங்கவேலாயுதபுரம் ஆகிய பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாழ்ந்த 176 குடும்பங்களை சேர்ந்த 609பேர் இன்று காலை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வு செயலகம் தெரிவித்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று,பலாச்சோலை,கிராண் ஆகிய பகுதிகளில் தற்காலிக குடியிருப்புகளில் தங்கியிருந்தவர்களே இன்று காலை பேரூந்துகளில் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வு செயலகம் மேலும் தெரிவித்தது.