தமிழின விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை விக்ரோறியா நினைவரங்கம் முன்பாக இன்று மாலை 5:00 மணியளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இயக்குநர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன் மற்றும் ஆயிரக்கணக்கான தமிழின உணர்வாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்:
ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!
ஒட்டுமொத்த தமிழ் மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்
ஈழத் தமிழர் நலனைக்காக்க
ஒட்டுமொத்த தமிழர் நடத்தும் ஆர்ப்பாட்டம்!
தமிழக அரசே தமிழக அரசே
ஈழத் தமிழர் உயிரைக் காக்க
ஈழத் தமிழர் உயிரைக் காக்க
மருந்து கொடு! உணவு கொடு!
ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம்
ஈழத் தமிழர் விடுதலைக்காக
ஈழத் தமிழர் விடுதலைக்காக
ஒன்றுபடுவோம்! ஒன்றுபடுவோம்!
தமிழர்கள் நாங்கள் ஒன்றுபடுவோம்!
வென்று காட்டுவோம்! வென்று காட்டுவோம்!
ஈழத் தமிழர் விடுதலைப் போரை
வென்று காட்டுவோம்! வென்று காட்டுவோம்!
இந்திய அரசே! இந்திய அரசே!
எங்கள் உரிமை! எங்கள் உரிமை!
எங்கள் ஈழத் தமிழர்களுக்கு
மருந்து கொடுப்பதும் உணவு கொடுப்பதும்
எங்கள் உரிமை! எங்கள் உரிமை!
இந்திய அரசே! இந்திய அரசே!
கொடுக்காதே! கொடுக்காதே!
எங்கள் தமிழரைக் கொன்று குவிக்கும்
எங்கள் தமிழரைக் கொன்று குவிக்கும்
சிங்கள இனவெறிக் கும்பலுக்கு
சிங்கள இனவெறிக் கும்பலுக்கு
ஆயுதங்கள் கொடுக்காதே! ஆயுதங்கள் கொடுக்காதே!
தமிழக அரசே! தமிழக அரசே!
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
ஈழத் தமிழரைக் காப்பாற்ற
ஈழத் தமிழரைக் காப்பாற்ற
நடவடிக்கை எடு
நடவடிக்கை எடு
கண்டிக்கிறோம்
ஈழத் தமிழரைக் கொன்று குவிக்கும்
சிங்கள அரசைக் கண்டிக்கிறோம்
எங்கள் இரத்தம் எங்கள் இரத்தம்
ஈழத் தமிழர் சிந்தும் இரத்தம்
ஈழத் தமிழர் சிந்தும் இரத்தம்
எங்கள் இரத்தம் எங்கள் இரத்தம்
ஆதரவு தருவோம்! ஆதரவு தருவோம்!
எங்கள் உறவுகளுக்கு ஆதரவு தருவோம்!
தாங்காதம்மா! தாங்கத்தம்மா!
ஈழத் தமிழர் துன்ப
தமிழகம் இனியும் தாங்கதம்மா
தமிழர் நாங்கள் பொறுக்கமாட்டோம்
தமிழர் நாங்கள் பொறுக்கமாட்டோம்
எங்கள் உறவு எங்கள் உறவு
ஈழத் தமிழர் எங்கள் உறவு
ஆதரிப்போம் ஆதரிப்போம்
எங்கள் உறவு தமிழினத்தை
எங்கள் உறவு தமிழினத்தை காஅதரிப்போம்
பாதுகாப்போம் பாதுகாப்போம்
பாதுகாப்போம் எங்கள் ஈழத் தமிழினத்தைப் பாதுகாப்போம்
பாதுகாப்போம் பாதுகாப்போம்
இந்திய அரசே! இந்திய அரசே!
இழுத்து மூடு! இழுத்துமூடு!
சென்னையில் உள்ள
சிங்கள தூதரகத்தை
இழுத்து மூடு!
என்பது உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.