13ஆவது அரசியலமைப்புத் திருத்ததை இரத்து செய்யவேண்டுமென ஜே.வி.பி.யின் பராளுமன்றத் குழுத் தலைவரும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளருமான விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார் அத்துடன், சேர்பியாவிலிருந்து கோசோவோ பிரிந்து செய்வதற்கு முன்னர் அதை அண்மித்த காலங்களில் கொசோவோவில் இருந்த நிலமையை இன்று இலங்கiயிலும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளர். கொழும்பு Nதிய நூலக ஆவணங்கள் சபை கேட்போர் கூடத்தில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் சார்பில் புதன்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே விமல் வீரவன்ச எம்.பி. இதனை தெரிவித்துள்ளார் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பது இந்தியாவினால் அன்றைய ஜே.ஆர். அராசங்கத்தின் மீது பலவந்தமாக திணிக்கபட்டதொன்றாகும் என்றும் அதனை அன்று கடுமையாக எதிர்த்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தற்போது அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்