இலங்கை ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு உலக ஊடக சுதந் திர இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைத் தீவில் உள்ள ஊடகவியலா ளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஊடகவியலாளர் சங்கங்கள், ஊடகசுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள் சார்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் வெளியிட்டுள்ள கவலை தொடர்பாக சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று வியாழக்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.அரச அதிகாரிகள் மற்றும் அதன் பிரதி நிதிகளால் ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வன்முறைக் கலாசாரத்தில் உடனடி மாற்றம் ஏற்படவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலக ஊடக சுதந்திர தினத்தை ஒட்டி யதாக நடத்தப்படவுள்ள "ஊடகவியலாளர் மீதான போரை நிறுத்து" என்ற தொடர் நட வடிக்கையின் முதற்செயற்பாடாக மஹிந்த ராஜாவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் உள்ளது.எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி யன்று பிரசாரச் செயற்பாட்டுக்கான உலகளாவிய நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு இரண்டு நாள்கள் முன்னதாக இத்தினம் வருவதால் தம்மையும் தங்கள் குடும்பத்தினரையும் ஆபத்து சூழ்ந்துள்ள நிலையிலும் ஊடக சுதந்திரத்துக்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கும் இலங்கையில் உள்ள ஊடகவியல் அமைப் புக்களுக்கு அது நம்பிக்கையும், தெம்பும் மிக்க செய்தியாக அமையும்."உலகில் ஊடகவியலாளர்களுக்கு அதிக ஆபத்துமிக்க நாடுகளில் இலங்கையும் ஒன்றாக நீண்டநாள்களாக கருதப்பட்டு வருகிறது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது நிலைமை மிகவும் பாரதூரமாக உள்ளது'' என்று சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் ஜக்குலின் பாக் கூறினார்.
தமக்கும் தமது குடும்பங்களுக்கும் உள்ள ஆபத்துகளின் மத்தியிலும் ஊடக சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கும் இலங்கை ஊடக வியலாளர்களுக்கும் சர்வதேச ஊடகவியலாளர் அமைப்புகளும் மனித உரிமைகள் அமைப்புகளும் தமது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் நல்கும் என்பதனையும் தெரிவித்து கொள்வதாக சர்வதேச ஊடக அமைப்புகள் மேலும் தெரிவித்திருக்கின்றன.