மணலாறு, ஜனகபுரம் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற மோதல்களில் இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மோதல்களின் போது 5 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இம்மோதல்களின் போது காயமடைந்த படையினர் பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோதல்களை அடுத்து படையினரால் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 5 புலி உறுப்பினர்களின் சடலங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இதேவேளை மணலாறு கிரிபன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிõந்தவரது சடலம் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.