வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் மரப்பொந்தொன்றினுள்ளிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞனொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே வாரிக்குட்டியூர் பகுதியில் இந்த தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மரப்பொந்தினுள் பொலித்தீன் பைக்குள் நன்கு சுற்றப்பட்டு இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தபோதே கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, தகவல் வழங்கிய மேற்படி இளைஞன் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.