News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

வட போர்முனை தொடர்பாக மகிந்தவுக்கு படைத் தளபதிகள் விளக்கம்

29-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

வட போர்முனை நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு முப்படைத் தளபதிகள் விளக்கமளித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
 
கொழும்பில் அரச தலைவர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை கூட்டப்பட்ட சிறப்பு பாதுகாப்புச் சபைக்கூட்டத்தில் யாழ். குடாநாட்டு மற்றும் வன்னிப் பகுதி இராணுவத் தளபதிகள் உட்பட முப்படைத் தளபதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தற்போதைய படை நடவடிக்கைகள் தொடர்பாக மகிந்த ராஜபக்சவிற்கு விளக்கமளித்துள்ளனர்.
 
சுமார் ஐந்து மணிநேரம் நடைபெற்ற இந்த மாநாட்டில் வவுனியா, மன்னார், மணலாறு, முகமாலைப் பகுதிகளில் நடைபெற்று வரும் படை நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
 
இதில்
 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,
 
முப்படைத் தளபதிகள்,
 
யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ,
 
57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ்,
 
58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவீந்திர சில்வா,
 
59 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடுவத்த,
 
மற்றும் கடற்படையின் பிராந்திய கட்டளைத் தளபதிகள்
 
ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
கடும் மழையிலும் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தனக்கு திருப்தி தருவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
பொதுவாக பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பிராந்திய கட்டளை அதிகாரிகள் அழைக்கப்படுவதில்லை.
 
எனினும் அவசரமான நேரங்களில் அவர்கள் அழைக்கப்படுவதுண்டு. 2000 ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டில் உள்ள படையினர் பெரும் நெருக்கடியை சந்தித்த வேளை, அன்றைய யாழ். குடாநாட்டு கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது என படைத்துறை அவதானிகள் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 Other Articles
•  10 May 2008 01:52:00 பெய்ரூட்டின் மேற்குப் பாதி ஹெஸ்புல்லா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது
•  10 May 2008 01:41:00 புரட்சிகர சிந்தனைகளோடு வளர வேண்டும்
•  10 May 2008 01:30:00 "த ஸ்ரார்" ஏட்டின் தலையங்கம்
•  10 May 2008 01:21:00 தகுதி பெற்றால் வர்த்தக சலுகைகள் புதுப்பிக்கப்படும்
•  10 May 2008 01:19:00 ஜனநாயக உரிமையை அபகரிக்கும் கொடூர செயல்
•  10 May 2008 00:59:00 திருமலை துறைமுகத்தில் படையினரின் வழங்கல் கப்பல் மூழ்கடிப்பு
•  09 May 2008 16:33:00 யாழில் ஒருவர் சுட்டுக் கொலை
•  09 May 2008 16:25:00 யாழ் முன்னாள் மேயர் சின்னத்தம்பி நாகராஜா அமெரிக்காவில் காலமானார்
•  09 May 2008 16:03:00 கிழக்குத் தேர்தலும் வரலாறு காணாத பாதுகாப்பும்
•  09 May 2008 15:30:00 ஆயுதக் குழுக்கள் அமைக்கும் புதிய முகாம்கள் நிறைவேற்றப்படாத தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகள்
•  09 May 2008 15:14:00 தேர்தல் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றேhர் மீது அதிருப்தி - ஹக்கீம்
•  09 May 2008 15:04:00 கையடக்கத் தொலைபேசி சேவை நிறுத்தம் மோசடிகளை மூடிமறைக்கும் வழியா? - ஹக்கீம்
•  09 May 2008 14:52:00 அம்பாறை குண்டு வெடிப்பு (மேலதிக தகவல்)
•  09 May 2008 14:38:00 அம்பாறையில் குண்டு வெடிப்பு - 11பேர் பலி
•  09 May 2008 13:30:00 படையினர் வெளிநாட்டில் வாழும் சிங்களவர்களிடையே நிதி சேகரிப்பு
•  09 May 2008 13:27:00 வன்முறை தொடர்பாக கபே(caffe)இறுதி அறிக்கை
•  09 May 2008 13:26:00 இலங்கையை நீக்க சூழ்ச்சி
•  09 May 2008 13:21:00 தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தடை
•  09 May 2008 13:13:00 அமைச்சர் மகிந்த சமரசிங்கள ஜெனீவா பயணம்
•  09 May 2008 13:10:00 தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்
•  09 May 2008 13:08:00 சட்டவிரோத ஆயுததாரிகளின் செயற்பாடுகளை தடைசெய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
•  09 May 2008 12:58:00 (2ம் இணைப்பு)மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
•  09 May 2008 12:48:00 தண்டணைக் காலம் முடிவடையும் முன்னர் கருணா விடுதலை?
•  09 May 2008 09:42:00 ஏப்ரலில் 32 பொதுமக்கள் படுகொலை
•  09 May 2008 09:39:00 கிழக்கு மக்கள் அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்
•  09 May 2008 09:37:00 நாளை வாக்களிப்பு
•  09 May 2008 09:32:00 மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
•  09 May 2008 07:00:00 ஆவணப்படமாக "யாழ். நூலக எரிப்பு"
•  09 May 2008 06:58:00 மட்டக்களப்பில் குடும்பப் பெண் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது.
•  09 May 2008 06:56:00 இல்லை என்கிறது- மெட்ரோபொலிட்டன் காவல்துறை
•  09 May 2008 06:55:00 சிறிலங்கா இராணுவத் தளபதியின் பாகிஸ்தான் பயணம் வெற்றி
•  09 May 2008 06:52:00 அடம்பன் நகர் படையினர் வசம்
•  09 May 2008 06:50:00 அமரிக்காவுடனும் ஈரானுடனும் உறவை சமமாக பேண இலங்கை முயற்சி
•  09 May 2008 06:45:00 20 உயர்தர மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு நிதி வழங்கல்
•  09 May 2008 06:37:00 சர்வதேசத்தின் பொருளாதார உதவிகள் வருட இறுதிக்குள் நிறுத்தப்படும் அபாயம்
•  09 May 2008 02:22:00 இரத்தினபுரியில் தாதிமார்கள் பணிப்புறக்கணிப்பு
•  09 May 2008 02:15:00 வவுனியா மதவாச்சிக்கு இடையில் புகையிரத இணைப்பு சேவை நடத்த ஏற்பாடு
•  09 May 2008 02:14:00 அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மீண்டும் அனுமதி
•  09 May 2008 02:04:00 சாட்சிகள் பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தாமையானது குற்றங்களை ஊக்குவிக்கிறது
•  09 May 2008 02:01:00 யாழில் போர் ஒத்திகை
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions