29-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
போரின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பணவீக்கம் உட்பட்ட பொருளாதார சீரின்மை காரணமாக ஸ்ரீலங்காவில் அத்தியாசிய பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன்படி அடுத்து வரும் நாட்களில் அரிசியின் விலை கிலோ ஒன்று 100 ரூபா வரை அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் அரிசி இறக்குமதிக்கான வரியை அரசாங்கம் நேற்று முதல் நீக்கியுள்ளதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதிகரித்துச் செல்லும் அரிசியின் விலையேற்றத்தைத் தடுக்கும் வகையில் இந்த வரி நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை கிலோ ஒன்றுக்கு 20 ரூபா அரிசி இறக்குமதி வரியாக அறவிடப்பட்டு வந்தது. இதன்பின்னர் எந்தவொரு தனிநபரும், நிறுவனமும் தீர்வையின்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
|