தற்கொலை குண்டுதாரி தனது மனத்தை மாற்றிக்கொண்டால் அவருக்கு ஒரு கோடி ரூபா ரொக்கம் பணம் தரப்படும் என கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியில் இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சுவரொட்டியில் தற்கொலைதாரி ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை போடப்பட்டு அதன் அருகே ''' நீங்களும் வாழப் பிறந்வர் தானே? ஏன் குண்டுதாரியாக மடிய வேண்டும்?'' என எழுதப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியில் சேர எண்ணம் கொண்டவர்கள் தங்களது மனதை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு மனதை மாற்றுபவர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ நல்ல ஒரு வாழ்வைத் தொடர 1 கோடி ரூபாக்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு மனதை மாற்றியவர்கள் 118 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளுமாறும் வேண்டப்பட்டுள்ளது.
ஒட்டப்பட்ட சுவரொட்டி குறித்து, தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் இது அரசாங்கத்தினால் ஒட்டப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தொவித்துள்ளனர்.