கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்தால் அரசாங்கம் அங்கு தோல்வியடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்தே கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை எனக்காரணம் காட்டி அந்தத்தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான ஒரு சம்பவமே அண்மையில் மட்டக்களப்பு வவுணத்தீவில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதல் எனத் தகவல்கள் கூறுகின்றன.