ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை நேற்று மேஙற்கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிமும் ரணில் விக்கிரமசிங்கவும் ஸ்ரீலங்காவி;ல் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்தை நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரையும் சந்தி;த்து கலந்துரையாடினார். இதேவேளை இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின் போது ஸ்ரீலங்காவின் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத்தேர்தலை சுயாதீனமான முறையில் நடத்த இந்தியா உதவவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது கருத்துரைத்துள்ள இந்திய உயர்ஸதானிகர் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரே முதலமைச்சராக பதவியேற்கவேண்டும் என இந்தியா எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்தே ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு நேற்று விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை பிரித்தானிய கன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லியாம் பொக்ஸ_ம் ஸ்ரீலங்காவி;ல் விஜயத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ளார்.