News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

இலங்கையில் அனைத்துலக சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகள் எவை?

29-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

இலங்கை தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகள் எவை? என்பது குறித்து ஜெகான் பெரெரா தனது கட்டுரையில் விபரித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேட்டுக்கு அவர் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:
 
இந்திய அரசாங்கம் ஒரே கருத்தையே ஆழமாக வலியுறுத்தி வருகின்றது. இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காணப்பட முடியாது என்பதே அந்தக் கருத்தாகும்.
 
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியப் பாதுகாப்பு அமைச்சும் அண்மையில் இந்தக் கருத்தையே எடுத்தியம்பியிருந்தது.
 
தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் ரீதியான தீர்வின் மூலம் சமாதான முன்னெடுப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
எனினும், இந்தச் செய்தி யாருக்கு சென்றடைய வேண்டுமோ அவர்களுக்கு சேர்ந்ததாக விளங்கவில்லை.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்நாட்டு அரசியல் தலைவர் ஒருவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் "ஒரே இலங்கைக்குள் அனைத்து சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
 
மேலும், "இராணுவ ரீதியில் தீர்வு காணப்பட முடியாது என்பதை நாங்கள் மிகவும் உறுதியாக நம்புகின்றோம்" என நாடாளுமன்ற ஆண்டறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
 
ஐக்கிய இலங்கைக்குள் அரசியல், அரசியல் சாசன மற்றும் ஏனைய விடயங்களுக்கும் அனைத்து இன மக்களும் குறிப்பாக சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மறுபுறத்தில், இந்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு இராணுவத் தளபாடங்கள், பாதுகாப்பு ஆலோசனை மற்றும் இராணுவப் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
 
அண்மையில் சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்து, சிறந்த வரவேற்பளித்திருந்தது.
 
இந்தச் செயலை தமிழீழ விடுதலைப் புலிகள் வன்மையாக கண்டித்திருந்தனர். மீண்டும் ஒரு வரலாற்று தவறிழைக்க இந்திய அரசாங்கம் விளைகிறது என அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
 
இதேபோன்றதொரு இரட்டைச் செய்தியையே அமெரிக்கா, சிறிலங்காவிற்கு விடுக்கிறது.
 
ஒரு புறத்தில் சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமைகளை மீறிவருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
பாரியளவு கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் கொலைகள் இலங்கையில் நடைபெற்று வருவதாகவும், இதற்கு எதிராக உரிய தண்டனைகள் வழங்கப்படுவதில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மறுபுறத்தில், இந்தியாவைப் போன்றே அமெரிக்காவும், இராணுவத் தளவாடங்கள், போர்த் தந்திரோபாய ஆலோசனைகள் மற்றும் இராணுவப் பயிற்சிகளை சிறிலங்காவிற்கு வழங்கி வருகிறது.
 
இந்த மாறுபட்ட செய்திகளிலிருந்து எது உண்மை என்பதை விளங்கிக் கொள்வது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.
 
அரசியல் தீர்வு மற்றும் அரசியல் செயற்பாடுகள் குறித்து ஒரு அக்கறை காணப்படும் அதேவேளை, ஒரு தரப்பின் இராணுவ பலத்தை வலுப்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகிறது.
 
எனவே இதற்குப் பதிலளிக்கும் போது மூன்று காரணிகள் குறித்து அவதானிக்கப்பட வேண்டும்.
 
இலங்கையின் நிலத்துவ எல்லைகளை பாதுகாத்தல்,
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் நெகிழ்வுத்தன்மையற்ற போக்கு,
 
இராணுவத் தீர்வுகளில் காணப்படும் நடைமுறைச் சாத்தியப்படாற்ற தன்மை என்பவை குறித்து ஆராயப்பட வேண்டும்.
 
ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கும் அநேகமான நாடுகள் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரம் சிறிலங்கா அரசாங்கத்தை விட ஓங்காமல் இருப்பதனை உறுதிப்படுத்துகின்றன.
 
ஆயுதப் போராட்டத்தின் மூலம் தீர்வுப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கருதுவதாகவே இந்த நாடுகள் குறிப்பிடுகின்றன.
 
உலகின் பலம் பொருந்திய இராணுவச் சக்திகளான அமெரிக்கா, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மறைமுகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் போருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போராட்டத்தில் உலகின் பலம் வாய்ந்த அநேக நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கே ஆதரவளித்து வருகின்றன.
 
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் இந்த ஒத்துழைப்பு போதுமானதாக அமையும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
 
அரசாங்கம் மற்றும் அதனுடன் இணைந்து போராட்டத்தை மேற்கொள்ளும் அனைத்து சக்திகளும் இங்கேதான் தப்புக்கணக்கு போடுகின்றன.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்ச்சக்தி அதிகரிக்காமல் இருப்பதற்காகவே அநேகமான அனைத்துலக சக்திகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.
 
இதன் மூலம், இராணுவ ரீதியில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது என்ற அழுத்தமான செய்தியை புலிகளுக்கு உணர்த்த முயற்சித்துள்ளன.
 
எனினும், மனித உரிமைகள் மீறப்படக்கூடாது என்பதிலும், குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதிலும் அனைத்துலக சமூகம் உறுதியான நிலைப்பாட்டிலேயே காணப்படுகின்றது.
 
மேலும், இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வின் மூலம் முடிவு எட்டப்பட முடியாது என்பதே அநேகமான அனைத்துலக நாடுகளின் ஏகோபித்த கருத்தாக அமைந்துள்ளது.
 
இராணுவ நடவடிக்கைகளோ அல்லது அழுத்தங்கள் மூலமாகவோ இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது என்பதனையே அனைத்துலகத்தில் நடைபெறும் போராட்டங்களின் மூலம் தெளிவாகியுள்ளது.
 
இராணுவ ரீதியிலான தீர்வை நோக்கி முன்நகரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இந்த யதார்த்ததையே எடுத்துரைக்கவே அனைத்துலகம் வலிந்து செயற்படுகிறது.
 
சில விதி விலக்குகளைத் தவிர, அநேகமான சந்தர்ப்பங்களில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் குழுக்களுடன் அரசாங்கமே சமாதான முன்னெடுப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.
 
சில வேளையில் இலங்கையில் பல சமாதானப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்துள்ள போதிலும், இலங்கை இந்த விதிவிலக்கு நாடுகளில் உள்டங்காது.
 
எவ்வளவு துரிதமாக அரசாங்கம் சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பாக அவதானம் செலுத்துகிறதோ அவ்வளவு சீக்கிரம் சமாதானத்தைப் பெற்றுகொள்ள முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 Other Articles
•  09 May 2008 13:30:00 படையினர் வெளிநாட்டில் வாழும் சிங்களவர்களிடையே நிதி சேகரிப்பு
•  09 May 2008 13:27:00 வன்முறை தொடர்பாக கபே(caffe)இறுதி அறிக்கை
•  09 May 2008 13:26:00 இலங்கையை நீக்க சூழ்ச்சி
•  09 May 2008 13:21:00 தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தடை
•  09 May 2008 13:13:00 அமைச்சர் மகிந்த சமரசிங்கள ஜெனீவா பயணம்
•  09 May 2008 13:10:00 தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்
•  09 May 2008 13:08:00 சட்டவிரோத ஆயுததாரிகளின் செயற்பாடுகளை தடைசெய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
•  09 May 2008 12:58:00 (2ம் இணைப்பு)மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
•  09 May 2008 12:48:00 தண்டணைக் காலம் முடிவடையும் முன்னர் கருணா விடுதலை?
•  09 May 2008 09:42:00 ஏப்ரலில் 32 பொதுமக்கள் படுகொலை
•  09 May 2008 09:39:00 கிழக்கு மக்கள் அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்
•  09 May 2008 09:37:00 நாளை வாக்களிப்பு
•  09 May 2008 09:32:00 மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
•  09 May 2008 07:00:00 ஆவணப்படமாக "யாழ். நூலக எரிப்பு"
•  09 May 2008 06:58:00 மட்டக்களப்பில் குடும்பப் பெண் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது.
•  09 May 2008 06:56:00 இல்லை என்கிறது- மெட்ரோபொலிட்டன் காவல்துறை
•  09 May 2008 06:55:00 சிறிலங்கா இராணுவத் தளபதியின் பாகிஸ்தான் பயணம் வெற்றி
•  09 May 2008 06:52:00 அடம்பன் நகர் படையினர் வசம்
•  09 May 2008 06:50:00 அமரிக்காவுடனும் ஈரானுடனும் உறவை சமமாக பேண இலங்கை முயற்சி
•  09 May 2008 06:45:00 20 உயர்தர மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு நிதி வழங்கல்
•  09 May 2008 06:37:00 சர்வதேசத்தின் பொருளாதார உதவிகள் வருட இறுதிக்குள் நிறுத்தப்படும் அபாயம்
•  09 May 2008 02:22:00 இரத்தினபுரியில் தாதிமார்கள் பணிப்புறக்கணிப்பு
•  09 May 2008 02:15:00 வவுனியா மதவாச்சிக்கு இடையில் புகையிரத இணைப்பு சேவை நடத்த ஏற்பாடு
•  09 May 2008 02:14:00 அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மீண்டும் அனுமதி
•  09 May 2008 02:04:00 சாட்சிகள் பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தாமையானது குற்றங்களை ஊக்குவிக்கிறது
•  09 May 2008 02:01:00 யாழில் போர் ஒத்திகை
•  09 May 2008 01:57:00 ரவூப் ஹக்கீம் சிறைச்சாலை பாதுகாவலரை அச்சுறுத்தினார்
•  09 May 2008 01:55:00 குற்றஞ்சுமத்தமுடியாவிட்டால் விடுதலை செய்யுங்கள்
•  09 May 2008 01:48:00 முஸ்லீம் இளைஞர்களை படையில் இணையுமாறு வற்புறுத்தும் படையினர்.
•  09 May 2008 01:42:00 ரணில் பிரசல்ஸ் பயணம்
•  09 May 2008 01:40:00 தென்மராட்சி வீடுகளில் கொள்ளை.
•  09 May 2008 01:37:00 தேர்தல்பிரசார நடவடிக்கைகளுக்காக 500 துறைமுக ஊழியர்களை ஈடுபடுத்தியுள்ளது
•  09 May 2008 00:58:00 ஊடகங்களுக்கு இராணுவத்தினர் தகவல்கள் தெரிவிக்கக்கூடாது
•  08 May 2008 16:17:00 தாதிமார்களின் பணிப்புறக்கணிப்பால் 3 நோயாளிகள் உயிரிழப்பு
•  08 May 2008 16:06:00 இலங்கைக்கான உலக உணவுத் திட்டத்தின் நிவாரணப் பணிகளுக்கு உதவ யப்பான் தயார்
•  08 May 2008 15:50:00 ஐ.நா மனித உரிமைகள் சபையில் இடம் பெறும் தகுதி சிறிலங்காவிற்கு இல்லை
•  08 May 2008 15:38:00 ஆடை ஏற்றுமதி தொழிலுக்கான சலுகை பெற ரணில் பிரசல்ஸ் பயணம்
•  08 May 2008 15:25:00 மதியாபரணம் நம்பிக்கை நிதியத்தின் உதவியுடன் மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவிப்பு நிதி
•  08 May 2008 14:54:00 அக்கரைப்பற்றைச் சேர்ந்த தமிழர் படையினரால் கடத்தல்
•  08 May 2008 14:46:00 எதிர்கால பக்க விளைவுகள் அற்ற மருந்துகளை தாயக மருத்துவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions