கண்டி சிறீலங்கா காவல்துறையினரால் 14 அகவையுடைய தமிழ் சிறுவன் கண்டி பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்து கண்டி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர் விசாரணைகளில் தெரிவிக்கையில் ‘தனது தந்தையார் இறந்து விட்டதாகவும் தனது தாயாருக்கும் இளைய சகோதரருக்கும் பணம் உழைத்து கொடுப்பதற்காக கண்டிக்கு வேலைதேடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்டவர் பவிதரன் எனவும் பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.