இலங்கை அரசு மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டுவருவதாக சர்வதேச ரீதியில் சர்வதேச சக்திகளினால் பொய் பிரசாரங்கள மேற்கொள்ளப்பட்டுவருவதாக அரசாங்கம் கடும் குற்றச்சாட்ட தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுகொள்கைகள் பலாத்காரமாக திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையெனவும் உதவிகளை நிபந்தனையாக விதிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லையெனவும் இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றித்துடனான ஜீ.எஸ்.பீ.முன்னுரிமை அடிப்படையிலான சலுகை ஒக்டோபர் மாதம் நிறைவடையவுள்ளது.
எனினும் சர்தேச ரீதியில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பிரசாரத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் பிழையான தீர்மானம் எதனையும் எடுக்காது என நம்புகின்றோம்.
அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம் தவறான முடிவுகள் எதனையும் எடுக்குமாயின் அதன் காரணமாக 30 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படையக்கூடும் எனவும் தெரிவித்தார்.
சர்வதேச சட்டவிதிகளை இலங்கை மதிக்கவில்லை என்பதை முற்றாக மறுப்பதாகவும் இலங்கை மனித உரிமைகளை சிறப்பாக பேணுவதாகவும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.