கடந்த இரு தினங்களாகத் தடைப்பட்டிருந்த காங்கேசன்துறைக்கும் திருகோணமலைக்குமான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் வழமைபோல் நடைபெறுமென யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்படும் கப்பலில் நோயாளிகள், நேர்முகப்பரீட்சைக்கு செல்வோர், அவசர பயணங்களை மேற்கொள்வோர் முன்னுரிமை அடிப்படையிலும், இரு தினங்களாகப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டோரும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.