மொனராகலை மாவட்டத்தின் பிரேதசபையின் உப தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்டவர் 61 அகவையுடைய அண்ணாமலை நாராயணன் முத்துலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை மாலை 6 மணியளவில் வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளால் இவர் சுடப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் இவர் மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். இவர் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.