கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவையில் இருந்து மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பயிலும் மூன்று யாழ்ப்பாண மாணவர்கள் வெள்ளை வாகனத்தில் வந்தோரால் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர் பி ராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது.
மந்துவில்லை சேர்ந்த தம்பிப்பிள்ளை கஜன் அளவெட்டியை சேர்ந்த கணெசன் செல்வரஞ்சன். வடமாராட்சியை சேர்ந்த சிவலிங்கம் ஆருரான் ஆகியோரே கடத்திச்செல்லப்பட்டுள்ளார்கள். இதில் பட்டமளிப்புக்கு பின்னர் கஜன் சார்ட்டட் எக்கவுன்டன்சி கல்வியை மேற்கொண்டு வந்தார். செல்வரஞ்சன் பட்டம் பெற்ற பின்னர் இன்னும் இரண்டு கிழமைகளில் வெளிநாடு செல்ல ஆயத்தமாகியிருந்தார். ஆருரான் தமது எம் எஸ் எஸி நெறியை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொட்டாஞ்சேனையில் இருந்து குணரட்ணம் கிருஸ்ணராஜ் என்ற இளைஞர் கடந்த 18 ஆம் திகதி கடத்திசெல்லப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இதந்கிடையில் மலையகத்தின் கண்டியில் 14 வயதான வவுனியா பண்டாரிக்குளத்தை சேர்ந்த பவிதரன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்’ இவர் தனது வாக்குமூலத்தில் தந்தையை இழந்து தமது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலை தேடி கணடிக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.