வவுனியா பிரதேசத்தில் உள்ள இராணுவ பயிற்சி முகாமில் சனிக்கிழமை அதிகாலை சிறிலங்கா படைசிப்பாய் பலி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மேற்படி இளைஞர் கிணற்றில் விழுந்தபோது அவரை படையினர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு பலியானவர் திவுலப்பிட்டி பகுதியைசேர்ந்த 18 வயதுடைய படைச்சிப்பாயென வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும் இது கொலையா அல்லது தற்கொலையா அல்லது தவறி விழுந்தாரா என்பது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக வவுனியா காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.