மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றத்துக்காக தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சனிக்கிழமை காலை சத்தியப்பிரமானம் எடுத்து தமது பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் தவிசாளர் பஸிர் சேகுதாவுத் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாநகரசபை,ஆரையம்பதி பிரதேசசபை,ஏறாவூர் பிரதேசசபை,கோரளைப்பற்று ஆகிய பிரதேச சபைக்கெனவே இந்த 7 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
இதில் ஏறாவூர் பிரதேசசபைகான தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டுள்ள பெரும்பான்மையின உறுப்பினர் ஒருவரும் சத்தியபிரமானம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.