யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் கோப் சிற்ரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினால் கோப் சிற்ரி அமைப்பதற்கு வழங்கப்படவுள்ள பல இலட்சம் ரூபா திரும்பக்கூடிய நிலை தோன்றியுள்ளதாகக் கூட்டுறவுத் திணைக்கள தரப்புகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் கோப் சிற்ரி என்ற நவீன வசதிகள் கொண்ட குளிரூட்டி தளபாட உபகரணங்களுடன் கூடிய மாதிரி விற்பனை நிலையங்களைத் திறந்து பாவனையாளர்களுக்கு மலிவான விலையில் வழங்கக்கூடிய செயற்பாட்டை செயற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இந்தச் செயற்பாட்டை நடைமுறைப் படுத்துவதில் கூட்டுறவுச் சங்கங்கள் அசமந்தப் போக்கைக் கடைபபிடிக்கின்றன. இதனால் கோப் சிற்ரி அமைப்பதற்கு வழங்கப்படவுள்ள பல இலட்சக்கணக்கான ரூபா திரும்பக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டிற்கு முன்பு இதனைக் கட்டி முடித்து விற்பனையை ஆரம்பிக்கவேண்டிய நிலையில் இதுவரை எந்தச் சங்கமும் அது தொடர்பான நடவடிக்கையை எடுக்கவில்லை.
இந்தக் கோப் சிற்ரி அமைப்பது தொடர்பில் கூட்டுறவுச் சங்கங்களின் கணக்குகள் எல்லாம் வங்கி ஊடாகவே செயற்படவேண்டும் என்பதால் கூட்டுறவுச் சங்கங்கள் கோப் சிற்ரியை அமைப்பதற்குக் பின்னிற்பதாகத் தெரியவருகின்றது