வவுனியாவில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
வவுனியா தெப்பங்காடு பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பெண்னொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு 10.30மணியளவில் தெப்பங்காடு பிரதேசத்தில் ஆட்டோவில் சென்ற ஆயுததாரிகள் இந்த துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
35வயதான மூன்று பிள்ளைகளின் தாயொவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் 9வயது சிறுமி ஒருவர் கூரிய ஆயுதங்களால் குத்திக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை குளத்துக்கு நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இப்பகுதியை சேர்ந்த பாலேந்திரன் நிரோசன்(19வயது) என்பரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேபோன்று வவுனியா செட்டிகுளம் பகுதியில் குளத்தில் நீராடச்சென்ற ஜோசப் அன்ரூ(22வயது) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்தோடு வவுனியா நெல்குளம் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 35வயது இளைஞர் ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.