சர்வதேசப் பிரமுகர்கள் குழுவின் பல சிபாரிசுகள் நிராகரிக்கப்பட்டன அல்லது கவனத்தில் எடுக்கப்பட்டாமல் விடப்பட்டன. அதனால் இலங்கையின் மனித உரிமைகளைப் பேணுவதில் எம்மால் பங்களிப்புச் செய்ய முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டது ஏற்பட்டது.
அதனால் நாம் அந்தக் குழுவிலிருந்து ஒட்டுமொத்தமாக விலக அதுவே காரணம்.அரசாங்க அதிகாரிகள் மனித உரிமைகளை மீறிய சந்தேக நபர்களாக நிறுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில், சர்வதேசப் பிரமுகர்கள் குழுவின் பிரசன்னத்துக்குத் தாழ்ப்பாழ் போடப்பட்டது. இவ்வாறு சர்வதேச பிரமுகர் சுயோட்சைக் குழுவின் உறுப்பினர்களின் ஒருவரான பரிஸ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், நீதிபதியுமான ஜீன் பியர் கொற் தெரிவித்தார்.
தேசிய மனித உரிமை விசாரனைக்குழுவின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சர்வதேசப் பிரமுகர் குழு நாளை மார்ச் 31ஆம் திகதியுடன் விலகிச் செல்கிறது. அந்தக் குழுவின் அங்கத்தவர்களில் ஒருவராகப் பணியாற்றியவர் ஜீன் பியரிகொற்.
கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு இலங்கையை விட்டுப் புறப்படுவதற்கு முன்னர் தாம் அளித்த பேட்டியிலே இந்த விவரங்களை அவர் வெளியிட்டார்.அவர் தெரிவித்த கருத்துக்களில் முக்கியமான அம்சங்கள் சில வருமாறு:
* தேசிய மனித உரிமை விசாரனை ஆணைக்குழு முற்று முழு தாகக் சுயோச்சையாகக் செயற்பட வகை செய்யப்பட வேண்டும். விசாரணை ஆணைக்குழுவுக்கு தேசிய மதிப்பு இருக்க வேண்டும். அதனை உருவாக்கக் கூடிய அரசியல் மனவுறுதியும் விருப்பரும் அரசாங்கத்துக்குத் தேவைதேசிய மனித உரிமை விசாரணை ஆணைக்குழு தனது கடமைகளைச் உரிய நியமங்களுக்கு ஏற்படச் செய்வதற்கு வசதி செய்யப்பட வேண்டும். விசாரணை ஆணைக் குழுவின் மதிப்பும் பெறுமதியும் பாதுகாக்கப்பட வேண்டும்.
* இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் , சர்வதேச சமூகம் சம்பந்தப்படுவதற்கு வகை செய்யப்பட வேண்டும்.
* குற்றம் புரிந்தவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.
* பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் சார்பில் சட்டவியலாளர்கள் தோற்றுவது ஒரு பெரும் பிரச்சினையாகி உள்ளது. இது பெரும் பாரதூரமான விடயமாகும்.
மனித உரிமை விசாரணை ஆணைக்குழுவின் அலுவலர்களையும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகளே பணி புரிவது மிகவும் பாதகமான கடும் விவகாரமாகும்.