News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

"உதய சூரியன்' சின்னத்தை தமதாக்கி தேர்தலில் போட்டியிட ஆனந்தசங்கரி முயற்சி

30-03-2008
5 / 5 (1 Votes)
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

தமிழர் விடுதலைக் கூட்டணியின் "உதயசூரியன்' சின்னத்தை பயன்படுத்தும் முழு உரிமையையும் கைப்பற்றி அந்தச் சின்னத்தில் அந்தப் பெயரில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டி இடுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி எத்தனித்து வருகின்றார்.
 
"உதயசூரியன்' சின்னத்தை பயன்படுத்துவதற்கான முழு உரிமை தமக்கு இருப்பதை அங்கீகரிக்கும் படி தேர்தல் ஆணையாளர் நாயகத்தை எழுத்து மூலம் அவர் கோரி இருக்கிறார் என அறியவந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பான சிக்கல் நீதிமன்றம் வரை சென்றிருப்பது தெரிந்ததே.
கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஒரு புறமாகவும் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.சம்பந்தனும் ஏனையோரும் மறுபுறமாகவும் கன்னை கட்டி நிற்க இவ் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் கலந்தாலோசனை இல்லாமல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டங்களை செயலாளர் நாயகம் இரா.சம்பந்தன் கூட்டக் கூடாது என தடைவிதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் கட்சியி கூட்டம் கூட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தேர்தல் ஒன்றில் போட்டி இடுவதானால் கட்சியின செயலாளர் நாயகத்தின் ஒப்பத்துடனேயே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் வேட்பாளர் தெரிவு உட்பட கட்சிப் பணிகளை முன்னெடுப்பதற்கான கட்சியின் பல்வேறு குழுக்களை செயலாளர் நாயகம் கூட்டுவதாயின் அதற்கு நீதிமன்றத் தீர்ப்பின்படி கட்சித்தலைவர் வீ.ஆனந்தசங்கரியினது ஒத்திசைவு அவருக்குத் தேவை. அது இல்லாத காரணத்தினால் கூட்டங்களும் கூட்டப்படவில்லை. தேர்தல்களிலும் அக் கட்சி போட்டியிடவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தோர் ஒருபுறம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சியில் தேர்தல்களில் நின்று வருகின்றார்கள். மறுபுறம் ஆனந்தசங்கரி மட்டும், அவ்வப்போது கூட்டமே கூட்டுப்படாத தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரைப் பயன்படுத்தி அக்கட்சியின் தலைவர் என்ற பெயரில் அறிக்கைகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார். எனினும் கட்சியின் ஏனைய பதவியினரோ அல்லது செயலாளர் நாயகமோ தம்முடன் ஒத்திசைவு கொள்ளாத காரணத்தால் அவரால் அதற்கு அப்பால் எதுவுமே செய்ய முடியவில்லை.
இந் நிலையில், இப்போது கட்சியின் முழு அதிகாரத்தையும் தாம் பயன்படுத்துவதற்கு தம்மை அனுமதிக்கக் கோரி அவர் தேர்தல் ஆணையாளர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என அறிய வருகின்றது.
கட்சியின் மாற்றுத் தரப்பினர் (சம்பந்தன் குழுவினர்) தனி அணியாகச் செயற்படுகின்றனர் என்றும்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்பதால் தமது பிரிவை தமிழர் விடுதலைக் கூட்டணியாக அங்கீகரித்து "உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் அக் கடிதத்தில் கோரியிருக்கின்றார் எனத் தெரிகின்றது.
தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு கட்சி ஒன்று இரண்டுபட்டு நிற்கும் போது அவற்றில் ஒரு பிரிவை உண்மையான அக் கட்சியினை தேர்தல் ஆணையாளர் அங்கீகரித்து அத் தேர்தல் செயற்பாடுகளுக்கு உள்வாங்கிக் கொள்வாரானால் அத் தேர்தல் முடிவடைவதற்குள் நீதிமன்றுக்குச் சென்று தேர்தல் ஆணையாளாரின் அந்த முடிவை தடுத்து நிறுத்துவதற்கு சட்டத்தில் வழி இல்லை என விடயம் அறிந்த வட்டாரங்கள் சுட்டிக்காடுகின்றன.
அதாவது, ஆனந்தசங்கரியின் தற்போ தைய கடிதத்தின் அடிப்படைகளை ஏற்று, தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டு அணிகளாகப் பிரிவுபட்டிருக்கின்றது என்ற முடிவுக்குத் தேர்தல் ஆணையாளர் வந்து, அதன் அடிப்படையில் ஓர் அணியான சங்கரி குழவினரைத் தேர்தல் ஆணையாளர் உண்மையான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கட்சி என அங்கீகரிப்பாராயினால்
அதன் அடிப்படையில் ஆனந்தசங்கரி தரப்பினால் தாக்கல் செய்யப்படும் வேட்பாளர் பட்டியலை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட் டணி வேட்பாளராக ஏற்று அந்த அணிக்கு "உதய சூரியன்' சின்னத்தை வழங்க அவர் தீர்மானிப்பாளாரானால்
தற்போதைய மாகாணசபைகள் சட்டத் தின் கீழ் நீதிமன்றத்துக்குக் சென்றும் கூட அதனைத் தடுத்து நிறுத்த முடியாது என சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின் றன.
எனினும், ஆனந்த சங்கரி இப்போது "உதய சூரியன்' சின்னத்தைப் பயன்படுத்த அனுமதி கோரி எழுதிய கடிதம் சம்பந்தமாக கட்சியின் பதிவு செய்யப்பட்ட செயலாளர் நாயகமான சம்பந்தரிடம் தேர் தல் ஆணையாளர் கருத்துக் கோரியிருக்கின்றார் என்று தெரிகிறது.
மகாணசபைத் தேர்தல் குறித்தும் ஏனைய விடயங்கள் குறித்தும் கட்சி ஆராய்ந்து வருகின்றது என்றும்
தனிநபரான ஆனந்தசங்கரி காரண மாகக் கட்சி பிளவு பட்டு இரு அணிகளாக உள்ளது என்று கருதுவது தவறு என்றும்
தாமே தொடர்ந்தும் கட்சியின் செயலா ளர் நாயகம் என்பதால் வேறு யாரையும் அப்பதவியில் ஏற்று அங்கிகரிக்கக் கூடாது என்றும்
இரா.சம்பந்தன் தேர்தல் ஆணையாளருக்கு எழுதிய பதிலில் தெரிவித்திருக்கிறார் எனவும் அறிய வருகின்றது.
இவ் விவகாரம் குறித்து தேர்தல் ஆணையாளர் என்ன முடிவு செய்திருக் கின்றார் என்பது இன்னும் தெரியவர வில்லை.
 Other Articles
•  16 May 2008 10:10:00 மாகாண சபை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர்
•  16 May 2008 10:08:00 ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில் மீன் வியாபாரி உடல்சிதறிப் பலி
•  16 May 2008 10:07:00 தலைமன்னார் பகுதியில் ஒருவர் கடத்தல்
•  16 May 2008 10:03:00 அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞர் அடித்துக்கொலை
•  16 May 2008 09:47:00 கொழும்பு குண்டுவெடிப்பு (மேலதிக தகவல்)
•  16 May 2008 07:57:00 கொழும்பு மத்தியில் குண்டுவெடிப்பு: 6 காவல்துறையினர் பலி- 90 பேர் காயம்(இணைப்பு)
•  16 May 2008 06:58:00 முதலமைச்சராக பிள்ளையான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
•  16 May 2008 06:51:00 கொழும்பு கோட்டை பகுதியில் குண்டு வெடிப்பு
•  16 May 2008 06:41:00 தமிழ் இராச்சியமொன்றுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை-விக்ரமபாகு கருணாரத்ன
•  16 May 2008 06:37:00 படையினர், பொதுமக்களிடையே ஏற்பட்ட குழப்பத்தில் மூவர் படுகாயம்
•  16 May 2008 06:27:00 மன்னாரில் துணைப்படையை கட்டியெழுப்ப அரசு திட்டம்
•  16 May 2008 06:25:00 திருக்கேதீஸ்வரம் முகாம் மீது ஆட்லறி தாக்குதல்
•  16 May 2008 01:31:00 பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  16 May 2008 01:23:00 மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரவில்லை
•  16 May 2008 01:21:00 உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்
•  16 May 2008 01:18:00 ஆயர் நற்சான்றிதழை கோருவதா
•  16 May 2008 01:15:00 இலங்கையின் பரிந்துரைகளுக்கு 65 நாடுகள் ஆதரவு
•  16 May 2008 01:10:00 மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு
•  15 May 2008 17:10:00 இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை - பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க
•  15 May 2008 15:49:00 யாழில் சரத்பொன்சேகா : தற்போதை நிலைமைகள் குறித்து ஆலோசனை
•  15 May 2008 15:36:00 இரத்தினபுரி பாடசாலைகள் சில மூடும் அபாயம்
•  15 May 2008 15:29:00 மறைந்த அமைச்சர் ஜெயராஜுக்கு நீர்கொழும்பில் சிலை
•  15 May 2008 15:19:00 5 விடுதலை புலிகளின் சடலங்கள் இராணுவத்தினரால் ஒப்படைப்பு
•  15 May 2008 15:03:00 மகிந்த ராஜபக்ச நடத்திய மோசடித் தேர்தல்
•  15 May 2008 14:55:00 கிழக்கில் இனி நடக்கப் போவது என்ன?
•  15 May 2008 14:48:00 இறுதி நேரத்திலும் இழுபறி: முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  15 May 2008 12:52:00 அரசாங்கம் இனவாதத்தை வளார்க்கவில்லை!
•  15 May 2008 12:47:00 நாளை பதவியேற்க உள்ளார்
•  15 May 2008 12:46:00 மேலும் ஒரு வருடத்துக்கு தடை
•  15 May 2008 12:44:00 கட்சி சின்னம் மக்களை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது
•  15 May 2008 12:41:00 வன்முறைகளில் 90 வீதமானவை தீர்க்கப்பட்டுள்ளன
•  15 May 2008 09:43:00 "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகள்
•  15 May 2008 09:35:00 இலங்கை இந்திய கடற்பரப்பில் முறுகல்
•  15 May 2008 09:33:00 சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது
•  15 May 2008 09:30:00 சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது
•  15 May 2008 09:26:00 போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
•  15 May 2008 05:30:00 பிள்ளையானே கிழக்கின் முதலமைச்சர்
•  15 May 2008 05:29:00 கருணா மீது போர் குற்றத்தை சுமத்தும் வாய்ப்பை பிரித்தானியா நழுவவிட்டுள்ளது
•  15 May 2008 05:27:00 திருகோணமலையில் அமைந்துள்ள மாகாணசபை கட்டிடத்திற்கு பாதுகாப்பு
•  15 May 2008 05:26:00 இன்று மாலை மகேஸ்வரியின் இறுதிக்கிரியை
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions