News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

இந்தியாவின் போக்குக் குறித்து ஈழத் தமிழர்களின் மனக்குறை

30-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

எப்போதெல்லாம் ஈழ மக்கள் மீது கொடூரமான போர் திணிக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் இந்திய அரசு கொடுக்கின்ற ஆயுதங்களை வைத்துத்தான் தமிழ் மக்களைக் கொல்கின்றது அரசு.
இப்படி ஒரு குற்றச்சாட்டை இந்தியத் தரப்பு மீது சுமத்தியிருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசன்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் அமைதித் தீர்வு காணும் எண்ணம் இலங்கை அரசுக்குக் கிஞ்சித்தும் கிடையாது. படை நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகளை அழிக்கும் இராணுவ வழித் தீர்வில் மட்டுமே கொழும்பு அரசு முனைப்பாக ஈடுபட்டுள்ளது'' என்று புதுடில்லி அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனே பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் அதேசமயத்திலேயே இலங்கைக்கான இந்திய இராணுவ உதவியும் தொடர்கின்றது.
 

பேரழிவு ஏற்படுத்தாத ஆயுதங்கள் என்ற பெயரில் இராணுவத் தளபாடங்களை இலங்கைக்கு இந்தியா வழங்குகின்றது; "ராடர்' போன்ற இராணுவச் செயற்பாடுகளுக்குத் தேவைப்படும் வான்வழிப் பாதுகாப்புக் கருவிகளை இந்தியா கொடுத்து உதவுகின்றது. இலங்கையுடன் கூட்டுக் கடல்ரோந்திலும் கண்காணிப்பிலும் ஈடுபடுகின்றது. இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் விசேட பயிற்சி வசதிகள் வழங்கப்படுகின்றன.
 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையில் தமிழர் தரப்புக்கு எதிரான கொடூர யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இலங்கை இராணுவத்தைப் போற்றித் துதிப்பது போல அதன் இராணுவத் தளபதியை வரவேற்று விசேட கௌரவமளிக்கின்றது இந்தியா. அவருக்கு அணி நடை மரியாதைகள், குதூகல வரவேற்பு என்று தூள் கிளப்புகிறது புதுடில்லி.
 

அவரது வருகையை ஒட்டி இந்தியாவில் தகவல் வெளியிட்ட இந்தியப் படைகளின் மூத்த அதிகாரி ஒருவர் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவத்தின் கைகள் நலிவடைவதை இந்தியா விரும்பவில்லை என்பதைப் பகிரங்கப்படுத்தியதன் மூலம் இவ்விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டைப் பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்திருக்கின்றார்.
 

இவ்வாறு யுத்த வெறித் தீவிரத்தோடு இராணுவ வழித் தீர்வில் முனைப்புக் கொண்டு நிற்கும் கொழும்புக்கு "வீடு எரிக்கும் ராஜாவுக்குக் கொள்ளிக்கட்டை தூக்கிக் கொடுக்கும் மந்திரி போல' இந்தியா செயற்படுகின்ற பின்னணியில், நடேசனின் குற்றச்சாட்டு மிக அர்த்தமுள்ளதாகவே படுகின்றது.
 

இந்தச் சமயத்தில் ஈழத் தமிழர் தரப்பில் ஒரு முக்கிய விடயத்தை இந்திய ஆளும் தரப்புக்கு இங்கு நினைவூட்டி சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும்.
 

ஈழத் தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் இந்திய உயர்மட்டத் தலைவர்களை 2006 டிசெம்பர் 22 ஆம் திகதி புதுடில்லியில் சந்தித்திருந்தனர். தமிழர்கள் தரப்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரும் இந்திய அரச உயர் பீடத்தின் சார்பில் பிரதமர் மன்மோன்சிங், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் போன்றோரும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.
 

இந்தச் சந்திப்புக்குச் சற்றுக்காலம் முன்னர்தான் பொதுநல அமைப்பு நாடுகளின் கம்பாலா மாநாட்டுக்குச் சென்றிருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இலங்கை இனப்பிரச்சினை குறித்து அங்கு விரிவாக உரையாடியிருந்தனர்.
 

அந்தச் சந்திப்பின் பெறுபேறுகளும் ஈழத் தமிழர்களின் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சந்திப்பின்போது ஆராயப் பட்டன.
 

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்குக் கொழும்பு அரசு கங்கணம் கட்டி நிற்பதை இந்தச் சந்திப்பின்போது முறைப்பாடாகத் தமிழர் தலைவர்கள் முன் வைத்தனர்.
 

"இது குறித்துக் கொழும்புடன் பேசியிருக்கின்றோம். வடக்கு கிழக்கு பிரிக்கப்படமாட்டாது என எமக்கு உறுதி தந்திருக்கின்றார்கள். வடக்கு கிழக்கு ஒன்றணைந்திருப்பதன் முக்கியத்துவத்தைக் கொழும்புக்கு விளக்கி, அதனை அவர்கள் ஏற்கச் செய்திருக்கின்றோம்.' என்ற சாரப்பட இந்தியத் தலைவர்கள் குறிப்பிட்டனர். அதற்கு ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் தெளிவாகப் பதில் தந்தனர்.
 

"கொழும்பின் உறுதி மொழிகளில் எமக்கு நம்பிக்கையில்லை. அதுதான் எமது அனுபவப் பாடம்; பட்டறிவு. வழமையான தனது பாணியில் தன்னுடைய இந்த வாக்குறுதியையும் கொழும்பு தவறவிட்டு காற்றில் பறக்கவிட்டு ஏமாற்றி, வடக்குக் கிழக்கைப் பிரிக்க முயன்றால் என்ன செய்வீர்கள்?' என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டார்கள்.
"எங்களுக்கு எல்லா வழிமுறைகளும் திறந்தே வாய்ப்பாகவே உள்ளன.'(All the options are open for us!) என்று இந்திய ஆளும் வர்க்கம் அப்போது உறுதியாகப் பதில் சொன்னது.
 

ஆனால் இப்போது என்ன நடக்கின்றது? வடக்கு கிழக்கைத் தனித்தனியாகப் பிரித்து, அதை உறுதிப்படுத்துவதற் காகக் கிழக்கிற்கு தனியாக மாகாண சபைத் தேர்தலை அவசர அவசரமாக நடத்தி முடிக்கத் துடிக்கிறது இலங்கை. அதற்கான நடவடிக்கைகளை விழுந்தடித்து வேகமாக எடுக்கின்றது.
 

ஆனால், "எமக்கு எல்லா வழிகளும் திறந்தே இருக்கின்றன!' என்று அப்போது தமிழ்த்தலைவர்களிடமே நேரில் மார்தட்டிய இந்தியத் தலைமை, கொழும்பு அரசின் தற்போதைய காய்நகர்த்தலை எப்படிச் சமாளிப்பது என்பது தெரியாமல் முழுசிக் கொண்டு அந்தரிக்கின்றது.
 

கொடுத்த வாக்குறுதியையும் கோட்டை விட்டுவிட்டு எதையும் செய்ய முடியாது கையைப் பிசைகிறது புதுடில்லி.
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரான தமிழர்கள் பெரும்பான்மையினரான சிங்களவரால் பலமுறை வாக்குறுதி கொடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர்.இந்த ஏமாற்றுதல் புராணத்தை இப்போது கொழும்பிடமிருந்து புதுடில்லியும் கற்றுக்கொண்டு இறக்குமதி செய்திருக்கிறது போலும்.
 

ஏற்கனவே, இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு முதல்நாள் இரவு புலிகளின் தலைவர் பிரபாகரனை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்து நீண்ட நேரம் பேசியபோது, எழுதப்படாத கனவான் ஒப்பந்தம் ஒன்றுக்கு உடன்பட்டு பல வாக்குறுதிகளை வழங்கினார் இந்தியப் பிரதமர். ஆனால் பின்னர் அவை காற்றில் பறக்க விடப்பட்டன.
 
இதன் பெறுபேறாகவே திலீபனின் உண்ணாவிரதமும், மரணமும், இந்தியப் படைகள் புலிகள் யுத்தமும் நேர்ந்தன என்பது சரித்திரம்.
 

அதுபோலவே, வடக்கு கிழக்கு இணைப்பை உறுதிப்படுத்த எல்லாவிதமான வழிகளும் தங்களுக்குத் திறந்திருக்கின்றன என்று ஈழத் தமிழர்களுக்கு உறுதியளித்த இந்தியத் தலைவர், இப்போது வடக்கு கிழக்குப் பிரிப்பு உறுதிப்படும்போது வாக்குறுதியை மறந்து வாளாவிருக்கின்றது.
 

இந்தப் பின்புலத்தில் புலிகளின் அரசியல் பொறுப்பாளர், சுமத்தும் குற்றச்சாட்டும் புதுடில்லி குறித்து ஆழமான சந்தேகங்களையே தமிழருக்கு எழுப்புகின்றன.
 
 Other Articles
•  16 May 2008 10:10:00 மாகாண சபை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர்
•  16 May 2008 10:08:00 ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில் மீன் வியாபாரி உடல்சிதறிப் பலி
•  16 May 2008 10:07:00 தலைமன்னார் பகுதியில் ஒருவர் கடத்தல்
•  16 May 2008 10:03:00 அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞர் அடித்துக்கொலை
•  16 May 2008 09:47:00 கொழும்பு குண்டுவெடிப்பு (மேலதிக தகவல்)
•  16 May 2008 07:57:00 கொழும்பு மத்தியில் குண்டுவெடிப்பு: 6 காவல்துறையினர் பலி- 90 பேர் காயம்(இணைப்பு)
•  16 May 2008 06:58:00 முதலமைச்சராக பிள்ளையான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
•  16 May 2008 06:51:00 கொழும்பு கோட்டை பகுதியில் குண்டு வெடிப்பு
•  16 May 2008 06:41:00 தமிழ் இராச்சியமொன்றுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை-விக்ரமபாகு கருணாரத்ன
•  16 May 2008 06:37:00 படையினர், பொதுமக்களிடையே ஏற்பட்ட குழப்பத்தில் மூவர் படுகாயம்
•  16 May 2008 06:27:00 மன்னாரில் துணைப்படையை கட்டியெழுப்ப அரசு திட்டம்
•  16 May 2008 06:25:00 திருக்கேதீஸ்வரம் முகாம் மீது ஆட்லறி தாக்குதல்
•  16 May 2008 01:31:00 பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  16 May 2008 01:23:00 மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரவில்லை
•  16 May 2008 01:21:00 உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்
•  16 May 2008 01:18:00 ஆயர் நற்சான்றிதழை கோருவதா
•  16 May 2008 01:15:00 இலங்கையின் பரிந்துரைகளுக்கு 65 நாடுகள் ஆதரவு
•  16 May 2008 01:10:00 மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு
•  15 May 2008 17:10:00 இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை - பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க
•  15 May 2008 15:49:00 யாழில் சரத்பொன்சேகா : தற்போதை நிலைமைகள் குறித்து ஆலோசனை
•  15 May 2008 15:36:00 இரத்தினபுரி பாடசாலைகள் சில மூடும் அபாயம்
•  15 May 2008 15:29:00 மறைந்த அமைச்சர் ஜெயராஜுக்கு நீர்கொழும்பில் சிலை
•  15 May 2008 15:19:00 5 விடுதலை புலிகளின் சடலங்கள் இராணுவத்தினரால் ஒப்படைப்பு
•  15 May 2008 15:03:00 மகிந்த ராஜபக்ச நடத்திய மோசடித் தேர்தல்
•  15 May 2008 14:55:00 கிழக்கில் இனி நடக்கப் போவது என்ன?
•  15 May 2008 14:48:00 இறுதி நேரத்திலும் இழுபறி: முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  15 May 2008 12:52:00 அரசாங்கம் இனவாதத்தை வளார்க்கவில்லை!
•  15 May 2008 12:47:00 நாளை பதவியேற்க உள்ளார்
•  15 May 2008 12:46:00 மேலும் ஒரு வருடத்துக்கு தடை
•  15 May 2008 12:44:00 கட்சி சின்னம் மக்களை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது
•  15 May 2008 12:41:00 வன்முறைகளில் 90 வீதமானவை தீர்க்கப்பட்டுள்ளன
•  15 May 2008 09:43:00 "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகள்
•  15 May 2008 09:35:00 இலங்கை இந்திய கடற்பரப்பில் முறுகல்
•  15 May 2008 09:33:00 சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது
•  15 May 2008 09:30:00 சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது
•  15 May 2008 09:26:00 போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
•  15 May 2008 05:30:00 பிள்ளையானே கிழக்கின் முதலமைச்சர்
•  15 May 2008 05:29:00 கருணா மீது போர் குற்றத்தை சுமத்தும் வாய்ப்பை பிரித்தானியா நழுவவிட்டுள்ளது
•  15 May 2008 05:27:00 திருகோணமலையில் அமைந்துள்ள மாகாணசபை கட்டிடத்திற்கு பாதுகாப்பு
•  15 May 2008 05:26:00 இன்று மாலை மகேஸ்வரியின் இறுதிக்கிரியை
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions