யாழ். குடாநாட்டிற்கு கப்பல்களில் பொருட்களைக் கொண்டு செல்லப்படுவதனால்தான் பொருட்களின் விலைகள் அதிகமாகவுள்ளதாக பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.
குடாநாட்டுக்கு சில மாதங்களுக்கு முன் நான் சென்றிருந்தபோது அங்கு பொருட்களின் விலை பெருமளவு அதிகமாக காணப்படுவதை அவதானித்தேன். இது குறித்து ஒருவரிடம் வினாவியபோது கப்பல்களில் பொருட்களை கொண்டு வருவதனாலேயே பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
சிறிலங்காவிலிருந்து சிங்கப்பூருக்கு கப்பலில் ஒரு தொகுதி பொருட்களை கொண்டு செல்ல 25 டொலர் அறவிடப்படுகிறது. ஆனால், யாழ்ப்பாணத்துக்கு பொருட்களை கொண்டு செல்ல 75 டொலர் அறவிடப்படுகிறது. இதற்கு காரணம் கப்பல்களை சிலரே வைத்துள்ளனர். அவர்கள் தான் பொருட்களின் விலையினை கட்டுப்படுத்துகின்றனர் என்றார்.