இலங்கை கடற்படையின் உயர்மட்டக் குழுவொன்று இந்தியா செல்லவுள்ளதாகத் தெரியவருகிறது.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினரின் டோரா படகுகள் மீதான தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் இருநாட்டு கடற்படையினருக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புகள் குறித்தும் ஆராயவே கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கொண்ட குழுவொன்று இன்று இந்தியா செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இந்திய கடற்படையினர் மற்றும் கடலோரக் காவல்படையினருடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலங்களில் இருநாட்டு கடற்படையினரும் மிகவும் நெருங்கிச் செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது.