நீண்டகாலம் மற்றும் குறுகியகால அடிப்படையில் சிறிலங்கா மிகவும் வறியநாடாக மாறி வருகின்றது என்று ஆசிய பசுபிக் பொருளாதார மற்றும் சமூகசேவைகள்
அமைப்பு அதன் 2008 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு தனது 60 ஆவது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நீண்டகால மற்றும் குறுகிய கால அடிப்படையில் சிறிலங்கா வறிய நாடாக மாற்றம் பெற்று வருகின்றது. இந்தியா, பங்களாதேஸ், ரஸ்யா போன்ற நாடுகளும் வறுமையான நாடுகளாக மாற்றம் பெற்று வருகின்றன.
சாதாரண தொழிலாளர்களின் குறைந்த ஊதியம் காரணமாக இந்தியாவில் 7.2 மில்லியன் மக்கள் புதிதாக வறுமை நிலையை அடைந்துள்ளார்கள். ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளில் விவாசாயத்துறை புறக்கணிப்புக்கு உள்ளாவதனால் 218 மில்லியன் மக்கள் வறுமை நிலையை அடைந்துள்ளனர். இது வறிய மக்களுக்கும் செல்வந்த மக்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துள்ளது.
விவசாயத்துறை தொழிலாளர்களுக்கான 60 விகிதமான வேலை வாய்ப்புக்களை வழங்கி வருவதுண்டு. எனினும் கடந்த 10 வருடங்களாக இந்த துறையை கொள்கை வகுப்பாளர்கள் புறக்கணித்து வருவதனால் இந்த துறை வீழ்ச்சியடைந்து வருகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.