தமிழிழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்க 2009 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் தேவைப்படும் என பாதுகாப்பு படையினர் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ரஜபக்சவுக்கு அறிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை வடக்குகிழக்கு போர் நிலைமை தொடர்பாக வடக்குகிழக்குக்கு பொறுப்பான படையதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர். இதன்போது ஏற்கனவே படையினரால் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏன் தமிழீழ விடுதலைப்புலிகளை தோங்கடிக்கமுடியவில்லை என வினவியுள்ளார்.
இதன் போது பதிலளித்துள்ள இராணுவ தளபதி சரத் பொன்சேகா திறமைவாய்ந்த சுமார் ஆயிரத்து ஐநூறு பேரைக்கொண்ட படைப்பிரிவு ஒன்றிற்கு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த படைப்பிரிவினால் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக திறம்படசெயற்முடியும் என குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகள் களத்தில் பாரிய எதிர்ப்பை வெளிக்காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சரத் பொன்சேகா சுமார் மூவாயிரம் தமிழிழ விடுதலைப்புலிகளே எஞ்சியிருப்பதாக தெரிவித்திருந்தார் ஈழம் போரின் நான்காம் கட்டம் ஆரம்பான பின்னர் 2500 தமிழிழ விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கிறது. எனில் இன்னும் 500 தமிழீழ விடுதலைப்புலிகளே எஞ்சியிருப்பர் என்ற ஆய்வாளர்களின் கருத்துதொடர்பாக பதிலளித்த தேசிய பாதுகாப்பு மைய பணிப்பாளர் லச்மன் உலுகல்ல இது விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் படையதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது பேசப்படவில்லை எனக்கூறினார்.