சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
Article by:
Sujee
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன் என சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே சந்திரிகா குமாதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன். ஜேவிபியுடன் கூட்டுச் சேர்ந்தது முதலாவது தவறு. 2004ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியைக் கலைத்தது இரண்டாவது தவறு.
மூன்றாவது தவறை கூற மறுத்த சந்திரிகா குமாரதுங்க எதிர்காலத்தில் அத்தவறைத் தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு மகிந்த ராஜபக்சவை கொண்டு வந்தமை சந்திரிகா குமாரங்க விட்ட மூன்றாவது தவறாக இருக்கலாம் என நோக்கப்படுகின்றது.